தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Release: வீக் எண்ட் மோட் ஆன்.. ஓடிடியில் இந்த படம் பார்த்தீங்களா

OTT Release: வீக் எண்ட் மோட் ஆன்.. ஓடிடியில் இந்த படம் பார்த்தீங்களா

Aarthi V HT Tamil

Sep 09, 2023, 06:40 AM IST

google News
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸான படங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸான படங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸான படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி இருக்கிறார். பாக்ஸ் ஃஆபிஸில் சக்கப் போடு போட்டு இருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இன்சீடியஸ் சாப்டர்

திகிலூட்டும் காட்சிகள் நிறைந்த படமாக வெளியானது, இன்சீடியஸ் சாப்டர் திரைப்படம். ரசிகர்களின் பாராட்டை பெற்ற இந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது.

I am Groot Season 2

மார்வெல் படங்களுடன் தொடர்புடைய இந்த சீரிஸின் 2 ஆவது சீசன் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. வார கடைசியில் குழந்தைகளுடன் இந்த படத்தை அமர்ந்து பார்க்கலாம்.

ஹட்டி

நடிகர் நவாசுதீன் சித்தீகி திருநங்கை கேரக்டரில் நடித்து படம், ஹட்டி. கிரைம் டிராமா ஜேனரில் வெளியான இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாத்திரத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடித்து இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி