தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Release: குஷி முதல் கிக் வரை.. இந்த வாரம் ஓடிடியில் கலக்கும் படங்கள்!

OTT Release: குஷி முதல் கிக் வரை.. இந்த வாரம் ஓடிடியில் கலக்கும் படங்கள்!

Aarthi V HT Tamil

Sep 28, 2023, 11:45 AM IST

google News
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

கிங் ஆஃப் கோதா

கிங் ஆஃப் கோதா படத்தில் கண்ணன் பாய் மற்றும் அவரது கும்பல் குற்றச்செயல்கள் நிறைந்த நகரத்தை ஆட்சி செய்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஷாஹுல் ஹாசனின் புத்திசாலித்தனமான சதி இந்த ஆட்சிக்கு சவால் விடும் வகையில் "ராஜாவை" மீண்டும் கொண்டு வந்து பழிவாங்குவது ஒரு விளையாட்டை மாற்றும் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.

இப்படத்தில், துல்கர் சல்மான், ராஜு மதராசி நடித்துள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கிங் ஆஃப் கோதா டிஜிட்டல் நாளை ( செப் . 29) வெளியாகிறது.

ஜான்வி

மலையாளப் படமான ஜான்வி இளமைக் காலக் காதலின் வியத்தக்க கதை. சுரேஷ் கோச்சேரி மற்றும் சியாத் பரம்பில் இணைந்து ஜான்வி படத்தை தயாரித்துஇருக்கிறார். ராஜேந்திர தேவஸ்ரேரி இயக்கி உள்ளார். ப்ரீத்தி ஜினோ மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஹெச் ஆர் பிளேவில் படம் வெளியாகிறது.

குஷி

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடித்த 'குஷி’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. செப்டம்பர் 29ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படத்தை பார்க்கலாம்.

கிக்

'டிடி ரிட்டன்ஸ்' படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிக்'. கன்னடத்தில் வெளியான 'ஜூம்' படத்தின் தமிழ் ரீமேக்காக படம் வெளியானது. சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

குமாரி ஸ்ரீமதி

நித்யா மேனன் நடித்த தெலுங்கு வெப் சீரிஸ் குமாரி ஸ்ரீமதி செப்டம்பர் 28 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி