Story of Song : அதுக்கு இவங்க சரிபட்டு வரமாட்டாங்க.. செண்பகமே செண்பகமே பாடல் செம்புகமே செம்புகமே ஆனக் கதை!
Dec 04, 2023, 05:30 AM IST
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடப்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
கங்கை அமரன் இயக்கத்தில் 1987ல் வெளியான படம் எங்க ஊரு பாட்டுக்காரன். இப்படத்தில் ராமராஜன், ரேகா, சாந்திபிரியா, செந்தாமரை, வினுச்சக்கரவர்தி, செந்தில், கோவை சரளா, எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கல்யாணி முருகன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அப்படி இப்படத்தில் இடப்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
”செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே
பூவச்சு போட்டும்வசு மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்
உன் அடி தேடி நான் வருவேனே
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா”
இப்பாடலை ஆஷா போஸ்லே பாடியிருப்பார். இப்பாடலை எழுதிய கங்கை அமரன் இளையராஜாவிடம் சென்று அவரிடம் ஒரே பாடல் மூன்று விதமாக வரும் இதற்கு தான் நீங்கள் டியூன் போட்டு தர வேண்டும் என கேட்கிறார். சரி என சொல்லி பாடலுக்கு டியூன் போடுகிறார் ராஜா. இந்த மூன்று பாடலில் ஒரு பாடலை மனோ, ஒரு பாடலை மனோவும், சுனந்தாவும் பாடி இருப்பார்கள்.ஒரு பாடலை ஆஷா போஸ்லே பாடியிருப்பார்.
இதில் என்ன வித்தியாசம் என்றால் முதல் இரண்டு பாடல் காதலில் பாடுவது, ஆனால் ஆஷா போஸ்லே பாடியது காதல் ஏக்கத்தில் பாடுவது போல அமைந்திருக்கும்.
முன்னதாக ஆஷாபோன்ஸ்லேவைக் இப்பாடலை பாட வைக்கலாம் என முடிவெடுத்த நிலையில் இளையராஜாவுக்கு ஒரு சந்தேகம். இது கிராமத்துப் பாடல் இதற்கு எதற்கு ஆஷா போன்ஸ்லே என்று கேட்கிறார். அதற்கு கங்கை அமரன் ஏற்கனவே புதுப்பாட்டுப் படத்தில எங்க ஊரு காதலப் பத்தி என்னா நினைக்கிற என்ற பாடல் உங்களுடன் இணைந்து ஆஷா போன்ஸ்லே பாடியிருப்பார்.
அதனால் தான் என சொல்ல அதற்கு இளையராஜா அது பாட்டு வேற. அது தப்பும் தவறுமா தமிழை உச்சரிக்கக்கூடிய பொண்ணுக்கு பாடுற பாட்டு. அவங்களுக்குத் தமிழ் தெரியாது. அவங்க எப்படி பாடினாலும் சரியா இருக்கும் என சொல்கிறார். ஆனால் கங்கை அமரனுக்கு ஆஷா போஸ்லேவை பாட வைப்பதில் உறுதியாக இருந்தார்.கடைசியாக இளையராஜாவும் சம்மதித்து விடுகிறார்.
மறுநாள் ஆஷாபோன்ஸ்லே ரெகார்டிங் வருகிறார். அங்கு கங்கை அமரன் ஆஷாபோன்ஸ்லேக்கு பாட்டைச் சொல்லிக் கொடுக்கிறார். இருவருக்கு மொழி பிரச்சனை வேறு வருகிறது. செண்பகமே செண்பகமே என பாட சொன்னால் அவர் செம்புகமே செம்புகமே எனப் பாடுகிறார்.
பக்கத்தில் ராஜாவோட உதவியாளர் கல்யாணம் என்பவர் இருந்தார். அவருக்கு இந்தி தெரியும். அவர் ஆஷாவிடம் இதை சொல்லி விளக்கிய பிறகு தான் அவர் செண்பகமே செண்பகமே என பாட தொடங்கினார்.
கடைசியில் முழுமையாகப் பாடலைக் பாடியதும் வீட்டிற்கு செல்லாமல் அங்கயேயே இருந்து பாடலை மிக்ஸ் செய்து முழுமையாக போட்டு காட்டுங்கள் என சொல்கிறார். பின்னர் பாடலை மிக்ஸ் செய்து போட்டு காட்டியதும் ஆஷா போஸ்லேயின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. ஏன் தெரியுமா அதில் அவர் அவ்வளவு உணர்வு பூர்வமாக பாடி இருப்பார். இளையராஜா இசையும் அவர் நெஞ்சை பிசைந்து கண்களில் நீராக வெளிவந்தது. இப்படி தான் இப்பாடல் உருவானது.
நன்றி : ஆலங்குடி வெள்ளைச்சாமி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.