தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Latha Rajinikanth:சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்; தியேட்டரில் கொண்டாடிய லதா ரஜினி

Latha Rajinikanth:சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்; தியேட்டரில் கொண்டாடிய லதா ரஜினி

Aarthi V HT Tamil

Dec 12, 2022, 03:03 PM IST

google News
தியேட்டரில் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கேக் வெட்டி லதா ரஜினிகாந்த் கொண்டாடினார்.
தியேட்டரில் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கேக் வெட்டி லதா ரஜினிகாந்த் கொண்டாடினார்.

தியேட்டரில் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கேக் வெட்டி லதா ரஜினிகாந்த் கொண்டாடினார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி நேற்று (டிசம்பர் 11) அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவர் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு, கலர் கரக்‌ஷன் செய்யப்பட்டு வெளியானது. புது படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அதே போன்று ரீ-ரிலீசான பாபா திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

இதை அவர்கள் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் பார்த்தனர்.

அப்போது ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தியேட்டரிலேயே பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் அந்த கேக்கை வெட்டினார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

அப்போது எடுத்த விடியோக்களை வெற்றி திரையரங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி