தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  H Vinoth: கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளி டூ தளபதி 69 டைரக்டர்.. சாதித்துக்காட்டிய சாமானியன்! -வினோத் வின்னரான கதை!

H Vinoth: கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளி டூ தளபதி 69 டைரக்டர்.. சாதித்துக்காட்டிய சாமானியன்! -வினோத் வின்னரான கதை!

Oct 04, 2024, 06:57 PM IST

google News
H Vinoth: இவரின் கல்ட் கிளாசிக்காக இன்றும் பார்க்கப்படுவது இவர் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம்தான். அந்தப்படத்தில் இவர் மீது விழுந்த வெளிச்சம்தான், இன்று இவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.
H Vinoth: இவரின் கல்ட் கிளாசிக்காக இன்றும் பார்க்கப்படுவது இவர் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம்தான். அந்தப்படத்தில் இவர் மீது விழுந்த வெளிச்சம்தான், இன்று இவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.

H Vinoth: இவரின் கல்ட் கிளாசிக்காக இன்றும் பார்க்கப்படுவது இவர் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம்தான். அந்தப்படத்தில் இவர் மீது விழுந்த வெளிச்சம்தான், இன்று இவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.

இன்று இணையம் முழுக்கவே விஜயின் ‘தளபதி 69’ படத்தின் பேச்சுதான் ஹாட் டாப்பிக். காரணம், படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்தப்படத்தை பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருக்கிறார்.

தளபதி 69 பூஜை

அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய இவருக்கு, தற்போது நடிகர் விஜயின் கடைசி படத்தை இயக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருந்தாலும், இவரின் கல்ட் கிளாசிக்காக இன்றும் பார்க்கப்படுவது இவர் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம்தான். அந்தப்படத்தில் இவர் மீது விழுந்த வெளிச்சம்தான், இன்று இவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக, தமிழ் சினிமா ரிவியூ சேனலுக்கு இவர் பேட்டிக்கொடுத்திருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

 

நடிகர் விஜயுடன் ஹெச்.வினோத்

அதில் அவர் பேசும் போது, “ நான் ஒன்றரை வருடங்களாக இயக்குநர் பார்த்திபனுடன் உதவி இயக்குநராக வேலை செய்தேன்.. அங்கு வேலை பார்த்த போது, எனக்கு சினிமா செட் ஆகாது என்று தோன்றியது. இதனையடுத்து, சினிமாவை கைவிட்டு விட்டு, சின்ன சின்ன நிறுவனங்களில் வேலை செய்தேன். அப்போதும், எனக்கு சினிமாவுக்குள் செல்ல வேண்டுமா? இல்லை வேண்டாமா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது. பார்த்த வேலைகளும் பெரிதாக செட் ஆகவில்லை. அந்த சமயத்தில்தான் என்னுடைய நண்பர் ஒருவர், கோயம்பேடு மார்க்கெட்டில் காண்ட்ராக்டராக வேலை செய்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை

இதனையடுத்து அவருடன் சென்று நான் வேலை செய்தேன். அப்போதுதான் எனக்கு எழுத்தாளரும், இயக்குநருமான ராஜமுருகன் அறிமுகமானார். அவர் அப்போது ‘சந்திரபாபு’ என்ற ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10 நாட்கள் அந்தப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதில் நான் அவருடன் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

அப்படியே ஒரு ஆறு மாதங்கள் சென்றது. இந்த நிலையில் தான் திடீரென்று ராஜமுருகனிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர் இயக்குநர் மில்டன் படம் எடுக்க இருக்கிறார். அதற்காக, அவர் கோயம்பேட்டை கதைக்களமாக தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல அவருக்கு அங்கே லொகேஷன்கள் கிடைக்கவில்லை.

கோலி சோடாவில் உருவான சதுரங்க வேட்டை

உனக்கு கோயம்பேடு பற்றி நன்றாகத் தெரியுமல்லாவா? அவருக்கு உதவி செய் என்றார். அதன்படி, நான் அவருக்கு சில கோயம்பேட்டில் சில லொகேஷன்களை காண்பித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து அந்த படத்தில் அவர் என்னை எனக்கு உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். இதனையடுத்து என்னிடம் இருக்கும் கதையை தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் சொல்லபல பேரிடம் என்னை பரிந்துரை செய்தார். ‘கோலி சோடா’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக ரெடி செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையே ஒரு நாள், விஜய் ஆண்டனியிடம் கதை சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது; நீ தயாராக இருந்து கொள் என்றார். அவருக்கு சொல்வதற்காக என்னிடம் இருந்த சீன்களை இரண்டு நாட்களில் தொகுத்து எழுதிய கதைதான் சதுரங்க வேட்டை. அப்போது நான் அதன் இரண்டாம் பாதியில், பெரிதாக வேலை பார்க்கவில்லை. அவருக்கும் இரண்டாம் பாதியில் பெரிதாக உடன் பாடில்லை. இந்த நிலையில் அதனை நான் மீண்டும் எழுதினேன். இறுதியாக அது மனோபாலா சார் கைக்குச் சென்றது. ‘சதுரங்க வேட்டை’ உருவானது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி