Thalapathy Vijay: ‘ கால் நடுங்கி நின்ற தயாரிப்பாளர்.. விஜயின் கன்னக்குழியில் ஆர்ப்பரித்த தியேட்டர்.. குஷி உருவான கதை!
Thalapathy Vijay: ஆனாலும்,அவர் ஓகே ஓகே என்று சொல்லி, படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஒரு நாள் படப்பிடிப்பில், எஸ்.ஜே சூர்யாவிடம், படத்தில் சண்டை காட்சிகளை வைத்தால், படம் பி , சி சென்டர்களில் ரீச்சாகும் என்று மீண்டும் சொன்னேன். - குஷி உருவான கதை!
(1 / 4)
Thalapathy Vijay: குஷி திரைப்படம் உருவான கதை குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார். விஜய்க்கு கதை பிடித்து விட்டது இது குறித்து அவர் பேசும் போது, “விஜய் அப்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். குஷி படமானது இடுப்பை நீ பார்த்தாயா, இல்லையா என்பதில் வரும், ஈகோவை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை. அந்த கதையை எஸ் ஜே சூர்யா விஜயிடம் சொன்னார். விஜயை பொறுத்தவரை, அவருக்கு கதை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதை கணிக்கவே முடியாது. இதனையடுத்து நான் விஜயிடம், விஜய் உங்களுக்கு கதை பிடித்து இருக்கிறதா என்று கேட்டேன். அவர் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து நாங்கள் படப்பிடிப்பிற்கு சென்று விட்டோம்.
(2 / 4)
கண்டுகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா நானும், விஜயும் எஸ். ஜே சூர்யாவிடம் படத்தில் இரண்டு ஆக்சன் சார்ந்த சண்டைக் காட்சிகளை வைக்குமாறு வலியுறுத்தினோம். ஆனால்,எஸ்.ஜே சூர்யாவுக்கு அப்படியான ஐடியாவே இல்லை. ஆனாலும்,அவர் ஓகே ஓகே என்று சொல்லி, படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஒரு நாள் படப்பிடிப்பில், எஸ்.ஜே சூர்யாவிடம், படத்தில் சண்டை காட்சிகளை வைத்தால், படம் பி , சி சென்டர்களில் ரீச்சாகும் என்று மீண்டும் சொன்னேன். அதை பின்னால் இருந்து விஜய் கேட்டுக் கொண்டிருந்தார்.
(3 / 4)
அவருக்கு படம் நன்றாக வந்து கொண்டு இருந்த காரணத்தால், படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். அந்த படத்தின் முதல் பிரீமியர் காட்சி, சென்னை உதயம் தியேட்டரில் தான் நடந்தது படத்தின் இரண்டு ரீல்கள் முடிந்த பின்னர், அங்கிருந்த ஸ்பீக்கர்கள் அவுட் ஆகிவிட்டன. இதனையடுத்து பக்கத்தில் இருந்த திரையரங்கில் இருந்து ஸ்பீக்கர்களை எடுத்து வந்து மாட்டினார்கள்.
(4 / 4)
படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருந்தது. நான் முன்னதாக நான் இந்தியன் படத்தை எடுத்திருந்தேன். விஜய் ஒரு மாஸ் ஹீரோ. இது இரண்டையும் வைத்து, ரசிகர்கள் வேறு எதையாவது எதிர்பார்த்து விடுவார்களோ, இது காதல் கதை என்பதால் அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்று நினைத்தேன். அதனால் அந்த காட்சியின் போதே பயத்தில் என்னுடைய கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.” கிளைமாக்ஸ்- ல் கொஞ்சம் நீளம் இருந்தது. இதையடுத்து அதை எடிட்டிங்கில் சரி செய்து, அடுத்த நாள் ரிலீஸ் செய்தோம். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக,ரசிகர்கள் ரியாக்ட் செய்தார்கள் காரணம் என்னவென்றால் முதல் ரீலிலேயே அவர்கள் படத்துடன் கனெக்ட் ஆகிவிட்டார்கள். இதையடுத்து, சூர்யாவை அழைத்து படம் ஹிட்டு என்று சொல்லி விட்டேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்