தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட திரைப்படங்களின் கிளைமாக்ஸ்

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட திரைப்படங்களின் கிளைமாக்ஸ்

Aarth V HT Tamil

Feb 16, 2022, 10:23 AM IST

google News
ரசிகர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சி திருப்தி கொடுக்காத காரணத்தினால் அவை மாற்றம் செய்து வெளியான படங்களின் பட்டியல்.
ரசிகர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சி திருப்தி கொடுக்காத காரணத்தினால் அவை மாற்றம் செய்து வெளியான படங்களின் பட்டியல்.

ரசிகர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சி திருப்தி கொடுக்காத காரணத்தினால் அவை மாற்றம் செய்து வெளியான படங்களின் பட்டியல்.

தமிழ் சினிமாவில் படங்கள் வெளியான பிறகு கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன படங்கள் நிறைய உள்ளன. அதனால் அவற்றை இயக்குநர்கள் மாற்றியமைத்த வரலாறும் இருக்கிறது. அப்படி  கிளைமாக்ஸ் மாற்றம் செய்த படங்கள் குறித்து பார்ப்போம்.

பிரியமுடன்

தளபதி விஜய் தற்போது வரை ஒரே மாதிரி படங்களை மட்டுமே கையில் எடுத்து நடிக்கிறார் என பலரும் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் 1998 ஆம் ஆண்டு வெளியான பிரியமுடன் படத்தில், விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் உயிரிழப்பது போல் படம் நிறைவு பெற்றது. ஆனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் விஜய் உயிரிழந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைவர்கள் என்றார். அதனால் விஜய், கௌசல்யாவை திருமணம் செய்துக்கொள்வது போல் மாற்றப்பட்டது.

இருப்பினும் விஜய் புது கிளைமாஸ் வேண்டாம் என்றதால் அவர் உயிரிழப்பு போல் திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.

கிரீடம்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் கிரீடம். 2007 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸான காப்பியில் ரவுடியை கொலை செய்த காரணத்தினால் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை கிடைத்தது. இதனால் அவர் சின்ன வயதிலிருது கண்ட கனவான காவலர் வேலை கிடைக்காமல் போனது.

<p>கிரீடம் படம்</p>

இந்த கிளைமாக்ஸ் காட்சி அஜித் ரசிகர்கள் பிடிக்காமல் போக உடனே படத்தின் இயக்குநர் எ.அல்.விஜய் உயர்நீதிமன்றத்தில், காவலரால் தேடப்பட்ட ரவுடியை அஜித் கொலை செய்ததால் அவரை விடுதலை செய்து, காவலர் வேலையையும் கொடுத்தது.

கல்லூரி

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான படம் கல்லூரி. தர்மபுரியில் கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு படம் வெளியானது.

<p>கல்லூரி படம்</p>

படம் வெளியான நாளன்று நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதுபோல் காட்டப்பட்டிருக்கும். ஆனால் படம் வெளியான அடுத்தநாளே வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் அக்காட்சியை நீக்கப்பட்டு இருக்கும்.

மின்சார கனவு

ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏற்கனவே படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டு இருந்தது. சன்னியாஸ்திரியாக செல்ல இருந்த கஜோலை, அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் சேர்த்து வைப்பார். 

இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு ஏற்கனவே எடுத்து வைத்திருந்த இரண்டாவது கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்டனர். அதில் அரவிந்த்சாமி, பாதிரியாராக அகுவதும், பிரபுதேவா கஜோலுக்கு திருமணம் செய்து வைப்பது போல் படம் நிறைவடைந்து இருக்கும்.

காதல் தேசம்

90ஸ் கிட்ஸூக்கு பரிட்சயமான படம் காதல் தேசம். தொலைக்காட்சியில் இன்று இப்படத்தை ஒளிப்பரப்பினால் கூட கண் இமைக்காமல் பார்பார்கள். குணால், சோனாலி பிந்த்ரே, கவுண்டமணி, நாசர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சோனாலி பிந்த்ரே மணமேடையில் விஷம் அருந்து தற்கொலை செய்துக் கொள்வது போல் இருக்கும். 

<p>காதல் தேசம் படம்</p>

ஆனால் அது ரசிகர்கள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் குணால், சோனாலி பிந்த்ரே திருமணம் செய்து கொள்வதுபோல் மாற்றி ரிலீஸ் செய்தனர். மேலும் இரண்டாவது முறை படப்பிடிப்பு நடத்த குணாலுக்கு தேதி இல்லாத காரணத்தினால் அவரது வேறு ஒருவரை வைத்து எடுத்துவிட்டு எடிட்டிங்கில் அவர் முகம் மாற்றப்பட்டது.

 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி