Keerthy Suresh:பள்ளி நண்பருக்கு கழுத்தை நீட்டும் கீர்த்தி: யார் அந்த லக்கி மேன்?
Jan 25, 2023, 05:50 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர், தமிழில் விக்ரம்பிரபு நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து தனுஷூடன் ‘தொடரி’ மீண்டும் சிவாவுடன் ‘ரெமோ’, விஜயுடன் ‘பைரவா’ சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இவர் நடித்த பெரும்பான்மையான தோல்வி படங்களாக அமைந்ததால், இவர் மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. அத்துடன் அவர் நடிப்பும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பழம் பெரும் நடிகையான சாவித்ரி வாழ்கை வரலாற்று படத்தில் சாவித்ரியாக நடித்தார்.
இந்தப்படத்தில் ஏகோபித்த பாரட்டைப்பெற்ற அவருக்கு அந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீமராஜா, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக்கு இறுதியாக சாணி காயிதம் படம் வெளியானது. அடுத்ததாக இவர் நடித்துள்ள ‘தசரா’ ‘ மாமன்னன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ரகு தாத்தா’, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, “ கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளிகால நண்பர் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். இந்தக்காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இருவரும் விரும்பியுள்ளனர். அந்த வகையில், இருவரும் அடுத்த நான்கு வருடத்தில் திருமணம் செய்ய உள்ளனர். கீர்த்தி சுரேஷை மணக்க இருக்கும் அந்த நபர் கேரளாவில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்