தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Karthik Raja: பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்த ஆங்கில படம் எது தெரியுமா?

HBD Karthik Raja: பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்த ஆங்கில படம் எது தெரியுமா?

Manigandan K T HT Tamil

Jun 29, 2023, 06:50 AM IST

google News
இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த கார்த்திக் ராஜா, சிறுவயதிலிருந்தே பல்வேறு வகையான இசைக் கருவிகளை இசைக்க கற்றுக் கொண்டார்.
இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த கார்த்திக் ராஜா, சிறுவயதிலிருந்தே பல்வேறு வகையான இசைக் கருவிகளை இசைக்க கற்றுக் கொண்டார்.

இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த கார்த்திக் ராஜா, சிறுவயதிலிருந்தே பல்வேறு வகையான இசைக் கருவிகளை இசைக்க கற்றுக் கொண்டார்.

கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் பிரபலமானவர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேலும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர்.

இவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜாவும் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். கார்த்திக் ராஜாவின் சகோதரி பிரபல பாடகி பவதாரிணி.

அவர் சென்னையில் உள்ள செயின்ட் பேட்ஸ் பள்ளி மற்றும் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயின்றார். 

இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த கார்த்திக் ராஜா, சிறுவயதிலிருந்தே பல்வேறு வகையான இசைக் கருவிகளை இசைக்க கற்றுக் கொண்டார்.

டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில், முக்கியமாக பியானோவில் மேற்கத்திய பாரம்பரிய இசையில் முறையான பயிற்சி பெற்றார்.

டி.வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் மலையாள இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் கர்நாடக இசைப் பயிற்சியும் பெற்றார். இளம் வயதில், கார்த்திக் ராஜா அடிக்கடி தனது தந்தையுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் செல்வார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாண்டியன் படத்தில் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடலை கம்போஸ் செய்தது இவரே.

இளையராஜா தான் இசையமைப்பாளர் என்றாலும் ஒரு பாடலுக்கு இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதைத் தொடர்ந்து உழைப்பாளி படத்திற்கு பின்னணி இசையை அமைத்தார் கார்த்திக் ராஜா.

மாபெரும் வெற்றி பெற்ற அமைதிப் படை படத்திற்கு பின்னணி இசை அமைத்ததும் கார்த்திக் ராஜாதான்.

எனக்கொரு மகன் பிறப்பான் படத்தில் இசையமைப்பாளராக பாடல்கள் மற்றும் பின்னணி இசையை முழுமையாக அமைத்தார்.

அதைத் தொடர்ந்து, அலெக்ஸாண்டர், உல்லாசம், காதலா காதலா, வாஞ்சிநாதன், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.

எனிதிங் ஃபார் யூ என்ற ஆங்கில திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா.

இந்தி, தமிழில் ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பின்னணி இசையில் மிரட்டினார்.

தனித்துவமான இசையால் கவனிக்க வைத்த இசை கலைஞன் கார்த்திக் ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி