‘20 வயசு சின்ன பொண்ணுடா உன் பொறாமையால அந்த பொண்ணு வாழ்க்கைய.. நீ ஒரு ஓரினச் சேர்க்கையாளன்..” - சுசித்ரா
Oct 17, 2024, 12:28 PM IST
‘20 வயசு சின்ன பொண்ணுடா உன் பொறாமையால அந்த பொண்ணு வாழ்க்கைய.. நீ ஒரு ஓரினச் சேர்க்கையாளன்..” - சுசித்ரா“பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமாருக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதற்கு கார்த்திக் மறைமுக ரிப்ளை கொடுத்த நிலையில், தற்போது அதற்கு சுசி பதிலடி கொடுத்திருந்தார்.” -
பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ராவின் பெயரானது சுசி லீக்ஸிற்கு என்ற பெயரில், நடிகர்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான பின்னர் வேறு மாதிரியாக மாறிவிட்டது. அண்மையில் கொடுத்த பேட்டிகளில் அதனை தான் வெளியிடவில்லை என்று கூறிய அவர், தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை பற்றியும் பல நெகட்டிவான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்தக் கருத்துகளை பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
போலி கணவனாக
அந்தக்கடிதத்தில், “ நீ எனக்கு போலி கணவனாக இருந்து, என்னை குழந்தைகளைப் பெறவிடாமல் தடுத்து, என் வாழ்நாளின் 13 ஆண்டுகளை அழித்துவிட்டாய். உன்னுடைய வைரல் வீடியோக்கள் நான் உழைத்த இடத்தில் இருந்து என்னை தூக்கி எறிந்து விட்டது.
நான் உன்னை திருமணம் செய்த போது, நீ திறமையற்றவனாக இருந்தாய். நீ நடித்த திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை மட்டுமே தந்தது. அதன் பின்னர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறினாய். அதிலும் பெண்களை கேவலமாக பேசினாய்.
உன்னை விட 20 வயது இளைய பெண்ணை திருமணம் செய்து கொண்டாய். அவள் முன்னர், நிறைய கவிதைகள் எழுதுவது, நடிப்பு உள்ளிட்ட பலவற்றை செய்து கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் பெரிதாக ஏதும் செய்ய வில்லை.. அதற்கு காரணமும் உன்னுடைய பொறாமையா?
ஓரின சேர்க்கையாளன்.
நீ ஒரு ஓரின சேர்க்கையாளன். ஆனால் அதனை நீ மறுக்கிறாய். நீ உன்னுடைய அம்மாவிடம் மட்டும்தான் அதிகமாக அன்பு செலுத்துகிறாய். இதுவும் ஒரு விதமான நோய்தான். 13 வருடங்கள் உன்னுடனான திருமண வாழ்க்கை மொத்தமும் வீண்தான். உன் மூலமாக வந்த ‘சுசி லீக்ஸ்’ பிரச்சினையால் என்னுடைய 9 வருட வாழ்க்கை பாலாய் போனது.
ஆக மொத்தம் 22 வருட எனக்கு நீ துரோகம் இழைத்திருக்கிறாய். பேட்டிகளில் பெண்களை மதிப்பது போன்று நடிக்கிறாய். நான் வாழும் வரை நீ ஒரு ஓரினசேர்க்கையாளன் என்பதை ஊருக்கு உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் ஒரு நாளும் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார், நான் அவளுடைய நீண்ட நாள் துணைவனாகவும், சக பெற்றோராகவும், உறுதுணையாகவும் இருந்து பார்த்துக்கொண்டேன். அவள் மட்டுமல்லாமல், அவளது குடும்பத்தையும் நான் பார்த்துக்கொண்டேன். அவளால்தான் அவள் வாழ்வில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். எனக்கான மதிப்பும் அவளிடத்தில் இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் நானும் அவளை விட்டு விலகி விட்டேன். நான் அவளுக்கு பெரிய இழப்பு” என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சுசி, “என்ன அப்படி பார்த்து விட்டீர்கள், சுசி லீக்ஸை செய்து என்னை படுகுழியில்தான் தள்ளியிருக்கிறீர்கள். உங்களுக்காக நான் 22 வருடங்களை கொடுத்திருக்கிறேன். நான்தான் உங்களுடைய மிகப்பெரிய இழப்பு என பல கருத்துக்களை அதில் பதிவிட்டு இருக்கிறார்.
யார் இந்த சுசித்ரா?
தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. சுமார் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், ரோடியோ துறையிலிருந்து தனது கெரியரை ஆரம்பித்தார். இதையடுத்து, நடிகர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் பாடகராக அறிமுகமானார். மனதை மயக்கும் இவரது குரலுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர்.
சர்ச்சை கருத்து
இந்நிலையில், தனது கணவர் கார்த்திக் உடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், சுசித்ரா கார்த்திக் குறித்தும் அவரது நண்பரான நடிகர் தனுஷ் குறித்தும் பல அவதூறான கருத்துகளை பொது வெளியில் கூறிவந்தார். இதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகள், அங்கு விநியோகிக்கப்படும் போதைப் பொருட்கள், நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை என தொடர்ந்து பல கருத்துகளை வெளியில் கூறிவந்தார்.
இதையடுத்து, பாடலாசிரியர் வைரமுத்து குறித்தும் பல சர்ச்சை கருத்துகளை கூறி வந்தார். பின் கணவரை விவாகர்தது செய்த நிலையில், இன்னும் தீவிரமாக தன் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து பேசி வந்தார். இவரது பேட்டி வெளியானாலே சர்ச்சைகளும் வெளிவரும் என மக்கள் காத்திருக்கும் நிலையில், இனி பேட்டிகள் எதுவும் தரப்போவதில்லை என தீர்க்கமாக முடிவெடுத்துள்ளார்.