Crime: ஓரினச் சேர்க்கையால் விபரீதம் 12 ம் வகுப்பு மாணவன் கொடூரமாக குத்திக்கொலை
12th Student Murder: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஓரினச்சேர்க்கை முன்விரோதத்தால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் மாணவர் ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். பட்டதாரி இளைஞரான இவர் மின்வாரியத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்ச்சியாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை குடும்பத்தினர் ஏற்கனவே பேசி கண்டித்துள்ளனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவனை ஆனந்த் அருகே உள்ள ஓடை பகுதிக்கு தனியாக அழைத்து சென்று ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மாணவன் மறுக்கவே ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்துருந்த கத்தியை எடுத்து மாணவனை 8 இடங்களில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்நிலையில் மாணவனின் உடல் கடலூர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரோதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்