Karthigai Deepam: ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தீபா.. கார்த்திக்கு தெரிய வரும் உண்மை
Sep 14, 2024, 01:09 PM IST
Karthigai Deepam: தீபாவை கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து விஷயத்தை சொல்ல போலீஸ் கேஸ் என்று சொல்ல அந்த பெண்மணி எனக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது.
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலின் வீக் எண்டு எபிசோட் ( செப் 14 மற்றும் செப் 15 ) அப்டேட் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், துங்கா மற்றும் தீபா என மூவரும் வேறுவேறு வண்டியில் ஒரே சிக்னலில் காத்திருக்கும் நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சிக்னலில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஆளுக்கு ஒரு திசையாக கிளம்பி விடுகின்றனர். இதையடுத்து தீபாவை கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து விஷயத்தை சொல்ல போலீஸ் கேஸ் என்று சொல்ல அந்த பெண்மணி எனக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது. நீங்களே கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று கிளம்பி வருகிறாள்.
அதெல்லாம் நமக்கு எதுக்கு
இதை தொடர்ந்து ஷக்தி என்ற அன்பான நர்ஸ் அறிமுகமாகிறார். ஊசி போட்டு கொள்ள அழும் குழந்தைக்கு பாசமாக பேசி ஊசி போட்டு விடுகிறாள். மைதிலி மீனாட்சியுடன் இதே ஹாஸ்பிடலுக்கு வர அப்போது ஊசி போட வந்த ஷக்தி என்ற நர்ஸை ஒரு பொண்ணு மலை உச்சியில் இருந்து விழுந்து விட்டதாக சொல்லி கொண்டிருக்க மீனாட்சி பேரை கேட்க மைதிலி அதெல்லாம் நமக்கு எதுக்கு என தடுத்து விடுகிறாள்.
ஒரு சிறிய மோதல்
பிறகு இவர்கள் கோவிலுக்கு வர மீனாட்சி அந்த பெண்ணுக்காக கடவுளிடம் வேண்டி கொண்டு பிரசாதத்தை எடுத்து கொண்டு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். நர்ஸிடம் அனுமதி கேட்டு அந்த பெண்ணுக்கு ( தீபா ) வைத்து விட icu-ல் நுழைய போகும் சமயத்தில் டாக்டர் அதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தி விடுகிறார்.
இன்னொரு பக்கம் துங்கா ஒரு ரெஸ்டாரெண்ட்ட் வந்து ரவுடிகளை வர வைத்து கீதா போட்டோவை காட்டி சல்லடை போட்டு தேட சொல்கிறான், கார்த்தியும் இதே ரெஸ்டாரெண்ட் வர அவனுக்கும் கார்த்திக்கும் ஒரு சிறிய மோதல் உருவாகிறது. இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.
ஹாஸ்பிடலில் தீபா
வரும் வழியில் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த பெண்ணின் கணவர் தீபாவின் தாலியை விற்க எடுத்து வந்தவன் கார்த்திக் மீது தவறுதலாக மோத தாலி கீழே விழ கார்த்திக் அதை பார்த்து அவனை மிரட்டி விசாரிக்க என் பொண்டாட்டிக்கு தான் தெரியும் என்று வீட்டிற்கு அழைத்து செல்கிறான். அடுத்து அந்த பெண்மணி கார்த்தியிடம் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த விஷயத்தை சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்