Karthigai Deepam: கார்த்திக், நட்சத்திராவிற்கு ரிஜிஸ்டர் மேரேஜ்.. அபிக்கு ஷாக்
Mar 13, 2023, 11:15 AM IST
கார்த்திகை தீபம் சிரீயலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜோசியர் ஜாதகத்தை பார்த்துவிட்டு இவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும் ஆனால் நிறைய தடங்கள் வரும் என சொன்னதை நினைத்து அபிராமி சந்தோஷமாக வீட்டுக்கு வருகிறாள்.
வீட்டுக்கு வந்ததும் பாம்பு கடித்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நட்சத்திரா வீட்டுக்கு வந்து கார்த்திக்கும் எனக்கும் முதலில் பதிவு திருமணம் செய்துவிடலாம் என தவிர்க்க முடியாத காரணம் ஒன்றை சொல்லி பேச அபிராமி அதற்கு சம்மதம் தெரிவிக்க அருணாச்சலம் உட்பட அனைவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதன் பிறகு அபிராமி இருவருக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது அப்படி இருக்கையில் இதில் என்ன பிரச்சனை என சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைக்க கார்த்தியும் அம்மாவின் ஆசைக்காக பதிவு திருமணத்திற்கு மனமில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறான்.
அடுத்து கார்த்தி ரூமில் அப்செட்டாக உக்காந்திருக்க தீபா என்ன ஆச்சு என காரணம் கேட்க கார்த்திக் நட்சத்திராவுடன் பதிவு திருமணம் நடைபெற உள்ள விஷயத்தை சொல்ல அதிர்ச்சி அடைகிறாள். மேலும் கார்த்தி எனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை, ஆனால் அம்மாவின் ஆசைக்காக என்னால் தவிர்க்க முடியவில்லை என்று கூறுகிறான்.
அதன் பிறகு மீனாட்சி தீபாவை சந்தித்து கார்த்தியிடம் உன் காதலை சொல்ல வேண்டியது தானே என கேட்க தயவு செய்து இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறாள்.
மேலும் தீபாவின் மனசாட்சி தோன்றி உனக்கு நட்சத்திரா பற்றி எல்லாம் தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறாய் என கேள்வி கேட்க பிறகு தீபா நட்சத்திரா நல்லவள் கிடையாது என்பதை ஒரு லெட்டர் மூலமாக எழுதி கார்த்திக்கு தெரியப்படுத்த முடிவெடுக்கிறாள்.
அதன் பிறகு மறுநாள் பதிவு திருமணம் செய்ய கிளம்ப அப்போது பால் திரிஞ்சு போயிருக்கிறது. அடுத்து அபிராமி வீட்டை விட்டு வெளியே போனதும் தடுக்கி கீழே விழ போகிறாள். இப்படி அடுத்தடுத்த தடங்கல் ஏற்பட்ட காரணத்தால் சாமி கும்பிட்டு விட்டு வருவதாக பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட போக விளக்கு அணைகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்