தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kannai Nambathey Review: நம்பலமா? வேணாமா? ‘கண்ணை நம்பாதே’ ‘நறுக்’ விமர்சனம்!

Kannai Nambathey Review: நம்பலமா? வேணாமா? ‘கண்ணை நம்பாதே’ ‘நறுக்’ விமர்சனம்!

Mar 16, 2023, 08:26 PM IST

Udhayanidhi Stalin Movie: உதயநிதியின் நடிப்பில் வழக்கம் போல எந்த வித மாற்றமும் இல்லை. பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். நாயகி ஆத்மிகாவிற்கு சாதாரண காதலி கதாபாத்திரம்தான்.
Udhayanidhi Stalin Movie: உதயநிதியின் நடிப்பில் வழக்கம் போல எந்த வித மாற்றமும் இல்லை. பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். நாயகி ஆத்மிகாவிற்கு சாதாரண காதலி கதாபாத்திரம்தான்.

Udhayanidhi Stalin Movie: உதயநிதியின் நடிப்பில் வழக்கம் போல எந்த வித மாற்றமும் இல்லை. பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். நாயகி ஆத்மிகாவிற்கு சாதாரண காதலி கதாபாத்திரம்தான்.

மார்ச் 17 நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே. சற்று முன் செய்தியாளர்களுக்கான சிறப்பு காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. படம் முடிந்த கையோடு இந்துஸ்தான் டைம்ஸ் நேயர்களுக்காக சுடச்சுட அந்த திரைப்படத்தின் விமர்சனத்தை வழங்குகிறோம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Aranmanai Collection: சுந்தர். சியின் அரண்மனை 4 கல்லா கட்டுச்சா.. முதல் நாள் வசூல் என்ன?

Aavesham OTT: ரூ.100 கோடி வசூல் செய்தும் ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வரும் ஃபஹத் ஃபாசிலின் ஆவேஷம்!

12 Years of Vazhakku Enn 18/9: நெஞ்சை ரணமாக்கும் க்ளைமாக்ஸ்! ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட நீதியை எதார்த்தமாக சொன்ன படம்

Trisha: இது தான் விஷயம்.. வருண், த்ரிஷா காதல் முறிவுக்கு இவ்வளவு பெரிய காரணம் இருக்கா?

கார் ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பூமிகாவை வீட்டில் கொண்டு விட்டு உதவி செய்கிறார் உதயநிதி. உதவி செய்ததற்கு கைமாறாக அவர் தனது காரை கொடுத்து, காலையில் கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார். அவர் சொன்னபடியே காரை கொண்டு செல்லும் உதய் காலையில் காரை எடுக்கச் செல்லும் போது காரின் டிக்கியில் பூமிகா பிணமாக இருப்பது போன்று காட்சி படுத்தப்படுகிறது. 

அவர் எப்படி இறந்தார்? இதற்கும் உதய் உடன் இருக்கும் பிரசன்னாவிற்கும் என்ன சம்பந்தம்..? இந்த பிரச்சினையில் ஸ்ரீகாந்த் எப்படி மாட்டினார் உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரில்லிங்காக சொன்னால் அதுதான் கண்ணை நம்பாதே படத்தின் கதை!

உதயநிதியின் நடிப்பில் வழக்கம் போல எந்த வித மாற்றமும் இல்லை. பிரசன்னா கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார். நாயகி ஆத்மிகாவிற்கு சாதாரண காதலி கதாபாத்திரம். 

படத்தின் பெரும்பலம் சஸ்பென்ஸ். ஒவ்வொரு காட்சியையும் தன்னுடைய திரைக்கதையால் அவ்வளவு திரில்லிங்காக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குநர் மாறன். காதலுக்காக வைத்திருந்த பாட்டு தேறவில்லை. ஆனால் அதில் விட்டதை மொத்தமாக பின்னணி இசையில் காண்பித்து விட்டார் இசையமைப்பாளர் சித்துகுமார். எடிட்டர் சான் லோகேஷ் கத்திரி அவ்வளவு ஷார்ப்பாக படத்தை கட் செய்திருக்கிறது. படம் சஸ்பென்ஸாக சென்றாலும், கதை  அடுத்தடுத்து இழுத்துக்கொண்டே சென்றது சலிப்பை தந்தது.. அதில் மட்டும் கொஞ்சம் தெளிவு இருந்திருந்தால் கண்ணை நம்பாதே இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும். 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.