அப்பு.. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.. நிஜ வாழ்க்கையிலும் இவர் ஹீரோ தான்.. புனித் ராஜ் குமார் பிறந்தநாள் இன்று!
Mar 17, 2024, 05:45 AM IST
HBD Puneeth Rajkumar : பாரம்பரிய கலை குடும்பத்தில் பிறந்த புனித் ராஜ்குமார் தனது 6 மாதத்திலேயே குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றினார்.இவர் தனது 10 வயதில் தேசிய விருது பெற்றார். 14 வயதில் 14 திரைப்படத்தில் நடித்து இருப்பார்.
தான் ஒரு நடிகன் எனற் பிம்பத்தில் இருந்து விலகி சமூகத்தில் ஒருவனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் தான் புனித் ராஜ்குமார். படங்களில் மட்டும் புரட்சிகரமான, வீரமான பஞ்ச் வசனங்கள் பேசாமல் நிஜத்திலும் வாழ்ந்து காட்டியதால் தான் ரசிகர்கள் இன்றளவும் அவரை கொண்டாடி வருகின்றனர் இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட மாமனிதன் தான் புனித் ராஜ்குமார்.
கன்னட திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த சந்தன கடத்தல் வீரப்பனால் கடந்த 2000 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ராஜ் குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். ராஜ்குமார் பர்வதம்மா தம்பதிக்கு 17 மார்ச் 1975ஆம் ஆண்டு சென்னையில் 5ஆவது மகனாக பிறந்தவர் தான் புனித். ராஜ்குமார் மூன்று மகன்களும் சினிமா துறையில் நடிகர்களாக நடித்துள்ளனர்.
ஆனால் இதில் புனித் ராஜ்குமார் தான் தன்னை கன்னட உலகின் பவர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துக்கு தன்னை வளர்த்து கொண்டார். அதுமட்டும் அல்ல புனித் நடிப்பு அசைவுகள் அனைத்தும் ராஜ்குமாரின் அசைகள் போலவே இருக்கும். தனது தந்தையை போலவே நன்றாக பாடக்கூடியவர். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பாடியும் உள்ளார். ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார்.
பாரம்பரிய கலை குடும்பத்தில் பிறந்த புனித் ராஜ்குமார் தனது 6 மாதத்திலேயே குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றினார்.இவர் தனது 10 வயதில் தேசிய விருது பெற்றார். 14 வயதில் 14 திரைப்படத்தில் நடித்து இருப்பார். பெட்டடா ஹுவு என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். 2002ஆம் ஆண்டு வெளியான அப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் புனித் ராஜ்குமார். அதிலிருந்து கன்னட மக்கள் புனித் ராஜ்குமாரை செல்லமாக அப்பு என்றே விழித்தனர்.
தன் திரை பயணத்தில் பன்முக திறனை வெளிபடுத்தி வேகம் காட்டியவர் புனித்.இவர் தனது தந்தையை போலவே நன்கு பாடுவார். கமக்களால் அன்புடன் கன்னட உலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார் புனித். தன் சினிமா பயணத்தில் அவர் 29 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்திருப்பார். ஃபிலிம் ஃபேர் விருது, சைமா விருது, கர்நாடக மாநில அரசின் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்
புனித் ராஜ்குமார், கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்தார். இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் மனைவி அஷ்வினி ரேவந்த். இவர்கள் ஜிம்மில் அறிமுகமாகி நட்பாக பழகி வந்த நிலையில் காலபோக்கில் நட்பு காதலாக மாற இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு திரித்தி, வந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் புனித். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி அன்று உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் இறப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புனித் ராஜ்குமார் திரையில் நடிகராக இருந்தாலும் உண்மையில் மனிதராகவே அனைவரிடமும் பழகி வந்துள்ளார். திடீரென தனது ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அவர் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சியடைவார். இவரை கன்னட திரை உலகினர் அப்பு என்று செல்லமாகவும் உரிமையாகவும் அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவர் மக்கள் உடன் ஒன்றி இருந்தார்.
அது மட்டும் இல்லாம் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் தொடர்ச்சியாக ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே வாழ்ந்துள்ளார்.
நாற்பத்து ஐந்து இலவச பள்ளிக்கூடங்கள், இருபத்து ஆறு அனாதை இல்லங்கள், பதினாறு முதியோர் இல்லங்கள்,19 பசு காப்பகங்கள், சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிகள், சுமார் ஆயிரத்து 800 மாணவர்களுக்கு இலவச கல்வி என இவை அனைத்தையும் தன் வாழ்நாளின் கடமையாக எண்ணி செய்து வந்த உன்னத நடிகர் தான் புனித் ராஜ்குமார்.இதுபோல இவர் மக்களுக்கு செய்த உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளில் அவரது நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் மகிழ்ச்சி அடைகிறது.