தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lok Sabha Election 2024: மண்டி தொகுதியில் கங்கனா, மீரட் தொகுதியில் டிவி நடிகர் அருண் கோவில் ஆகியோர் பாஜக சார்பில் போட்டி

Lok Sabha Election 2024: மண்டி தொகுதியில் கங்கனா, மீரட் தொகுதியில் டிவி நடிகர் அருண் கோவில் ஆகியோர் பாஜக சார்பில் போட்டி

Marimuthu M HT Tamil

Mar 25, 2024, 12:09 AM IST

google News
மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தும், மீரட் தொகுதியில் டிவி நடிகர் அருண் கோவிலும் போட்டியிடுகின்றனர். பிலிபிட் தொகுதியில் வருண் காந்தியும், சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர்.
மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தும், மீரட் தொகுதியில் டிவி நடிகர் அருண் கோவிலும் போட்டியிடுகின்றனர். பிலிபிட் தொகுதியில் வருண் காந்தியும், சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர்.

மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தும், மீரட் தொகுதியில் டிவி நடிகர் அருண் கோவிலும் போட்டியிடுகின்றனர். பிலிபிட் தொகுதியில் வருண் காந்தியும், சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான 111 வேட்பாளர்களின் 5வது பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் மீரட்டைச் சேர்ந்த அருண் கோவில் ஆகியோர் அடங்குவர். 

பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர் என்று தன்னை அடிக்கடி அழைத்துக் கொள்ளும் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொடரான ராமாயணத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவில் ஆகிய இருவருக்கும் பாஜக, மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக நிற்க சீட் கொடுத்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலில் வருண் காந்தியும், சுல்தான்பூர் தொகுதியில் அவரது தாயார் மேனகா காந்தியும் போட்டியிடுகின்றனர். பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை உத்தரகன்னடா தொகுதியிலிருந்தும், மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே பக்சார் தொகுதியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சீதா சோரன், தும்கா தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரே நாளில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். 

பாஜகவின் 5ஆவது பட்டியல் வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு), இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய் மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆகியோர் பற்றி பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் எந்த அறிவிப்பும் இல்லை. 

மண்டியில் இருந்து கங்கனா ரனாவத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர்வதில் மகிழ்ச்சியடைவதாக கங்கனா ரனாவத் கூறினார்.

மேலும் கங்கனா ரனாவத், "எனது அன்புக்குரிய இந்தியா மற்றும் பாரத தேசத்தின் சொந்தக் கட்சியான, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ளது.

பாஜகவின் தேசிய தலைமை எனது பிறந்த இடமான இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த மேலிடத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்ததில் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன். நான் ஒரு தகுதியான பாரதிய ஜனதா கட்சியின் செயல் நிர்வாகியும் நம்பகமான பொது ஊழியராகவும் இருக்க விரும்புகிறேன்" என்று கங்கனா ரனாவத் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் ஐந்தாவது பட்டியலில், உஜியார்பூரைச் சேர்ந்த நித்யானந்த் ராய், பெகுசராயைச் சேர்ந்த கிரிராஜ் சிங், பாட்னா சாஹிப்பைச் சேர்ந்த ரவிசங்கர் பிரசாத், பெலகாமைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர், சிக்கபல்லாபூரைச் சேர்ந்த கே.சுதாகரன், சம்பல்பூரைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான், பாலசோரைச் சேர்ந்த பிரதாப் சாரங்கி, பூரியைச் சேர்ந்த சம்பித் பத்ரா, புவனேஸ்வரைச் சேர்ந்த அபராஜிதா சாரங்கி, பிலிபிட்டைச் சேர்ந்த ஜிதின் பிரசாதா, டார்ஜிலிங்கைச் சேர்ந்த ராஜு பிஸ்தா, தம்லுக்கைச் சேர்ந்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், பர்தமான்-துர்காபூரைச் சேர்ந்த திலீப் கோஷ் ஆகியோர் உள்ளனர். 

வெகுநாட்களாக வலதுசாரியாக தன்னை வெளிப்படுத்தி வந்த நடிகை கங்கனாவுக்கு, பாஜக சீட் கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி