KH 233: சம்பவம் இருக்கு.. கையில் தீப்பந்தம்.. கமல் ஹாசனின் மீரட்டும் 233 ஆவது பட அப்டேட்
Jul 05, 2023, 08:43 AM IST
நடிகர் கமல் ஹாசனின் 233 ஆவது பட அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல் ஹாசன் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்கவே கமல் ஹாசன் அதிகமாக விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதன்படி பல முன்னணி இளம் இயக்குநர்களிடம் அவர் தனது அடுத்த திரைப்படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இதனிடையே கமல் ஹாசனின் 233 வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அவரின் அடுத்த திரைப்படத்தை துணிவு திரைப்பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த அறிவிப்பு தொடர்பான அதிகாரபூர்வ வீடியோவை கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு, மாஸான ஆடியோ உடன் கமல் ஹாசன் தோன்றுகிறார். படத்தின் பெயர் வெளியிடாமல், Rise To RUle என்ற வாசகம் அதில இடம் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெல் பாதுகாப்பு உறுப்பினர்களை கமல் ஹாசன் சந்தித்து பேசி இருந்தார். அப்போது இயக்குநர் ஹெச். வினோத் அவருடன் இருந்தார். அதனால் அப்போதே இவர்கள் இருவரின் பட கூட்டணி உறுதியானது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தன.
நடிகர் கமல் ஹாசன் தற்போது இயக்குநர் சங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அப்படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்