தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  29 Years Of Nammavar: கமல்ஹாசனின் வாத்தி ரெய்டு! 3 தேசிய விருதுகள், 90ஸ்களில் கோடியில் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த படம்

29 Years of Nammavar: கமல்ஹாசனின் வாத்தி ரெய்டு! 3 தேசிய விருதுகள், 90ஸ்களில் கோடியில் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த படம்

Nov 02, 2023, 05:15 AM IST

google News
தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கோடிகளை அள்ளியது கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படம். வழக்கம்போல் கமலின் கெட்டப் இந்தப் படத்திலும் பேசும் விதமாக அமைந்திருந்தது.
தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கோடிகளை அள்ளியது கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படம். வழக்கம்போல் கமலின் கெட்டப் இந்தப் படத்திலும் பேசும் விதமாக அமைந்திருந்தது.

தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கோடிகளை அள்ளியது கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படம். வழக்கம்போல் கமலின் கெட்டப் இந்தப் படத்திலும் பேசும் விதமாக அமைந்திருந்தது.

உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இருந்து வரும் நம்மவர் படத்தை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.எஸ். சேதுமாதவன் இயக்கியிருப்பார். கமலுடன் இணைந்து கெளதமி நடித்திருக்கும் இந்தப் படத்தில் இருவருக்கும் டூயட் பாடல் இல்லை என்பது கூடுதல் ஸ்பெஷல்.

கல்லூரி புரொபசராக வரும் கமல்ஹாசன் போதை பழக்கம், ரவுடித்தனம் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்துவ தான் படத்தின் ஒன் லைன். இதை ஆரம்பம் முதல் இறுதி வரையில் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருப்பார்கள்.

படத்தில் வலுவான வில்லன் கேரக்டர் என்று ஏதும் இல்லாமல், கல்லூரி மாணவனாக வரும் இளம் நடிகர் கரண், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பால் அப்பலாஸ் வாங்கியிருப்பார். படத்தில் மற்றொரு கதாபாத்திரமாக வருவது பிரபாகர் ராவ் என்ற பெயரில் புரொபோசராக வரும் நாகேஷ். தனது பாணியில் காமெடி மற்றும் சீரியஸ் கலந்து வேடத்தில் பின்னியிருப்பார்.

கெளதமி, செந்தில், ஸ்ரீ வித்யா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, கோவை சரளா, டெல்லி கணேஷ் என படத்தில் இடம்பிடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

பிளாக் அண்ட் ஓயிட் காலத்தில் இருந்தே இருந்து வரும் நாகேஷ் பல பாடங்களில் அசர வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்காமலேயே இருந்து வந்தது. ஆனால் இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கும் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

நம்மவர் படத்துக்கு இந்த விருதுடன் சிறந்த பிராந்திய மொழி படம், சிறப்பு விருதாக இசையமைப்பாளர் மகேஷ் மாதவனுக்கு என மூன்று விருதுகளை வென்றது. அத்துடன் தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான இரண்டாவகு பரிசு, சிறப்பு விருது நாகேஷுக்கு என இரண்டு விருதுகளை வென்றது.

ஹாலிவுட் படங்களான டு சார் வித் லவ், கிளாஸ் ஆஃப் 1984, தி பிரன்ஸிபல் ஆகிய படங்களில் தாக்கத்தை கொண்டு இந்தப் படம் அமைந்திருக்கும். நம்மவர் படத்தின் இன்ஸ்பிரேஷனால் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்கியதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி வெளியீடாக நவம்பர் 2ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. நம்மவர் படத்துடன் பெரிய படங்களாக விஜய்காந்த் நடித்த பெரிய மருது, சரத்குமார் நடித்த நாட்டாமை, பிரபு நடித்த ஜல்லிக்கட்டு காளை உள்பட அஜித் நடித்த பவித்ரா, நெப்போலியன் நடித்த மணிரத்னம் ஆகிய படங்களும் வெளியாகின. இந்த ரேஸிஸ் கமலின் நம்மவர், சரத்குமாரின் நட்டாமை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி டாப் இடத்தை பிடித்தன. 90ஸ் காலத்தில் ரூ. 10 கோடிக்கு நெருங்கி பாக்ஸ் ஆபிஸ் இந்த படம் வசூலை செய்தது. கமல்ஹாசன் வாத்தி ரெய்டு நடத்திய படமான நம்மவர் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி