தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil Season 7: ‘அவன் எனக்கு மாமனா..’ பிரதீப்பை வெளுத்த மாயா.. விஷ்ணுவை கண்டித்த விசித்ரா - பிக்பாஸில் இன்று!

Bigg Boss Tamil Season 7: ‘அவன் எனக்கு மாமனா..’ பிரதீப்பை வெளுத்த மாயா.. விஷ்ணுவை கண்டித்த விசித்ரா - பிக்பாஸில் இன்று!

Oct 04, 2023, 10:15 AM IST

google News
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது.

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. முதல் நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதன்படி, கூல் சுரேஷ், அனன்யா, நிக்சன், ஐஸ்வர்யா, விசித்ரா, ரவீணா, வினுஷா தேவி, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி. விஷ்ணு, பவா செல்லதுரை, ஜோவிகா, பூர்ணிமா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், விஜய் வர்மா என மொத்த 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, கேப்டன்சி டாஸ்க், பசில் டாஸ்க் என ஆரம்பமே பரபரவென சென்று கொண்டிருக்கிறது. இம்முறை இரண்டு வீடுகள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் விஜய் வர்மா போட்டியாளர்கள் சிலரை இரண்டாம் வீட்டிற்கு அனுப்பினார். அவர்களதான் மொத்த பிக்பாஸ் வீட்டிற்கும் சமைக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்த போதும், யுகேந்திரனும், விசித்ராவும் விதிகளை மீறி உதவி செய்தனர். இதனால் பிக்பாஸ் அவர்களையும் இரண்டாவது வீட்டிற்கு அனுப்பினார்.

விசித்ராவும் யுகேந்திரனும் இரண்டாவது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த நிலையில், தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு இவர்கள் இரண்டு பேருக்கு பதிலாக, அங்கிருக்கும் இரண்டு பேரை இங்கே அனுப்புமாறு பிரதீப் கேட்க, விசித்ரா எங்களை விட பலமான போட்டியாளர்கள் அங்கே இருக்கிறார்களா? என்று வினவ சண்டை மூண்டது.

இந்த விவகாரத்தில் விஜய் வர்மாவும் தலையிட்டு பிரதீப்பை வெளுத்து வாங்க.. நான் தோத்துட்டேன்ப்பா… என்று சென்று விட்டார் பிரதீப். இதனையடுத்து யுகேந்திரனும், விசித்ராவும் இரண்டாவது வீட்டிற்குள் செல்ல, நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி சுமாராக சென்றது.

இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகி இருக்கிறது. சகபோட்டியாளர்களை பற்றி தெரிந்து கொள்ளும் டாஸ்க்கில் விஷ்ணு, மாயா கிருஷ்ணன் பிரதீப்பின் உணர்விற்கு சரிவர மரியாதை கொடுக்க வில்லை என்று சொல்ல, மாயா அவன் எனக்கு மாமனா மச்சானா.. என்றார். இதனையடுத்து பிரதீப், இவர் டாப்பிக்கை புரிந்து கொண்டு செய்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை, ஆகையால் கொஞ்சம் விசாரிக்கலாம் என்று எகிற, விஷ்ணு இவர் எப்படி மற்றவர்களை மூளைச்சலவை செய்யலாம் என்று சாடுகிறார். தொடர்ந்து விசித்ரா விஷ்ணுவை, நீ நிறைய பேரோட பர்சனல் பக்கங்களை இழுத்தாய் என்று சாடினார். அத்துடன் இன்றைய புரமோ முடிகிறது.

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி