தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer: ‘நல்லா பண்ணிருக்கீங்க ரஜினி..’ தொலைபேசியில் வாழ்த்திய கமல்!

Jailer: ‘நல்லா பண்ணிருக்கீங்க ரஜினி..’ தொலைபேசியில் வாழ்த்திய கமல்!

Aug 14, 2023, 12:55 PM IST

google News
விக்ரம் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய போது, இதோ போலவே ரஜினியும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் 300 கோடி அளவிற்கு வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. 

இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இருவருக்கும் முக்கியமான படமாக பார்க்கப்பட்ட ஜெயிலர், அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்து வருகிறது. 

படம் வெளியாவதற்கு முதல் நாளே இமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த், அந்த வெற்றியிலும், கொண்டாட்டத்திலும் பங்கேற்காமல், ஆன்மிக வழியில் தன் நன்றியை கடவுளுக்கு தெரிவித்து வருகிறார்.  இயக்குனர் நெல்சன், யூடியூப்புகளில் பேட்டி கொடுக்கத் தொடங்கிவிட்டார். வெற்றி பெற்றால் மட்டுமே இததெல்லாம் சாத்தியம்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொலை பேசி வழியாக தொடர்பு கொண்ட உலக நாயகன் கமலஹாசன், அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வெற்றி பற்றியும், வசூல் குறித்தும், தனக்கு நெருங்கியவர்கள் அளித்த தகவலை, ரஜினியிடம் பகிர்ந்து கொண்ட கமல், தன்னுடைய மனப்பூர்வமான வாழ்த்தை அவரிடம் பகிர்ந்துள்ளார். 

அதே போல ,படத்தின் இயக்குனரான நெல்சனையும் தொடர்பு கொண்டு, கமல் வாழ்த்தியுள்ளார். டிவி நிகழ்ச்சி தயாரிப்பு மூலம், ஏற்கனவே கமலுடன் அறிமுகத்தில் இருந்தவர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. 

விக்ரம் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய போது, இதோ போலவே ரஜினியும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி