தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raayan: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? - ராயனால் தனுஷுக்கு கிடைத்த இரண்டு ட்ரீட்

RAAYAN: கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? - ராயனால் தனுஷுக்கு கிடைத்த இரண்டு ட்ரீட்

Aarthi Balaji HT Tamil

Aug 22, 2024, 05:43 PM IST

google News
RAAYAN: ராயன் படம் வெற்றியடைந்த நிலையில் நடிகர் தனுஷை சந்தித்து, கலாநிதி மாறன் அவருக்கு 2 காசோலைகளை வழங்கினார்.
RAAYAN: ராயன் படம் வெற்றியடைந்த நிலையில் நடிகர் தனுஷை சந்தித்து, கலாநிதி மாறன் அவருக்கு 2 காசோலைகளை வழங்கினார்.

RAAYAN: ராயன் படம் வெற்றியடைந்த நிலையில் நடிகர் தனுஷை சந்தித்து, கலாநிதி மாறன் அவருக்கு 2 காசோலைகளை வழங்கினார்.

RAAYAN:  தனுஷின் 50 ஆவது படமாக ராயன், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியானது ராயன். இந்த படத்தில் அவர் நடித்தது மட்டுமல்லாமல், இயக்கியும் உள்ளார்.

சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கேங்கஸ்டர் படமான ராயன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ராயன் பற்றி

ராயன் படம் தனுஷின் இரண்டாவது இயக்குனர் முயற்சியையும், அவரது 50 வது திரைப்படத்தையும் குறிக்கிறது. தனுஷ் எழுதிய இப்படத்தில் ராயன் நடிகராகவும் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சரவணன் ஆகியோரும் ராயன் படத்தில் நடித்து உள்ளனர்.

இரண்டு காசோலைகள்

ராயன் படம் வெற்றியடைந்த நிலையில் நடிகர் தனுஷை சந்தித்து, கலாநிதி மாறன் அவருக்கு 2 காசோலைகளை வழங்கினார். 

இது தொடர்பாக வெளியான பதிவில், “ திரு.கலாநிதி மாறன், தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். ராயனின் மாபெரும் வெற்றிக்காக அவருக்கு 2 காசோலைகளை வழங்கினார் - ஒன்று ஹீரோவுக்கும் ஒன்று இயக்குனருக்கும் “ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயன் வசூல்

ராயன் படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இது வரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ராயன் படத்துக்கு அங்கீகாரம்

திரையிலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃபி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தனுஷின் ராயன் படத்தின் திரைக்கதை இடம்பெற தேர்வாகியுள்ளது.

ராயன் விமர்சனம்

படத்தைப் பற்றிய இந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனத்தில், "கதாநாயகனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா உட்பட படத்தின் அனைத்து முக்கிய நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தனுஷ் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராக அவருக்கு கொடுக்கப்பட்ட தோற்றம் (குட்டையான முடி, கரடுமுரடான தாடி) மற்றும் அவர் தனது கோபத்தை கண்களால் வெளிப்படுத்தும் விதம் மிகவும் வசீகரிக்கிறது, குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டையில். திரைப்படம் ஏ சான்றிதழ் மற்றும் தீம் கும்பல் போர்கள் என்பதால், வெளிப்படையாக நிறைய வன்முறை உள்ளது (குறிப்பாக இரண்டாம் பாதியில்). படத்தில் சில சிறந்த அதிரடி / சண்டை தொகுதிகள் உள்ளன, அவை நன்றாக நடனமாடி படமாக்கப்பட்டுள்ளன, குறிப்பாக நடிகர்களுடன் படம் எடுக்கும் கையடக்க கேமராவின் பயன்பாடு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி