Jyothika: கணவன் மனைவி இடையே காதல் மலர செய்ய வேண்டிய சிம்பிளான இரண்டு விஷயங்கள்! ஜோதிகா தரும் டிப்ஸ்
Nov 23, 2023, 12:44 PM IST
கணவன் மனைவிக்கு இடையே காதல் மலர பரஸ்பரம் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து நடிகை ஜோதிகா வெளிப்படுத்தியுள்ளார்.
கோலிவுட் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளாக சூர்யா - ஜோதிகா உள்ளார்கள். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் நடிப்பிலிருந்து விலகிய ஜோதிகா, ஒரு மகள், மகன் பெற்றெடுத்த பின்னர் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
சினிமாவில் ஜோதிகாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் - தி கோர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ஜோதிகா. அப்போது அவர் தனது காதல் கணவரும், நடிகருமான சூர்யாவிடம் தனக்கு இருக்கும் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: " துணைகளுக்கு இடையே பாராட்டுவதும், அவர்களை மதிப்பதும் மிகவும் முக்கியமான விஷயமாகும். உங்களை துணை உங்களுக்கான மட்டுமானவார் என முழு உரிமையும் எடுத்துக்கொள்ள கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையும், பாராட்டுகளையும் தவறாமல் கொடுத்தாலே காதல் என்ற அற்புதம் இயல்பாகவே இருவருக்குள்ளும் நடக்கும்.
ஏற்கனேவே ஒரு பேட்டியில் சூர்யாவை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்பதன் காரண்தை வெளிப்படுத்தியிருந்தார் ஜோதிகா, அதில், "இயக்குநர் எதிர்பார்க்கும் விஷயங்களை தனது நடிப்பின் மூலம் சூர்யா சரியாக வெளிப்படுத்துவார். தேவையில்லாத விஷயங்கள் எதையும் செய்ய மாட்டார். அவருடன் பணியாற்றியத்தில் சக நடிகர்களுக்கு தரும் மரியாதையை பிடித்திருந்தது. நான் பணத்தை நன்கு சம்பாதித்தேன். அவரை போன்ற குணத்தை பார்த்த பின்னர் அடுத்த மாதத்திலேயே திருமணம் செய்தேன்" என்றார்.
மம்முட்டி - ஜோதிகா இணைந்து நடித்திருக்கும் காதல் - தி கோர் படத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்