தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ' ஜீவி 2 ' படம் குறித்து மனம் திறந்த எடிட்டர்

' ஜீவி 2 ' படம் குறித்து மனம் திறந்த எடிட்டர்

Aarthi V HT Tamil

Apr 30, 2022, 08:12 PM IST

google News
' ஜீவி 2 ' படம் குறித்து பிரவின் கே . எல் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார் .
' ஜீவி 2 ' படம் குறித்து பிரவின் கே . எல் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார் .

' ஜீவி 2 ' படம் குறித்து பிரவின் கே . எல் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார் .

‘ 8 தோட்டாக்களுக்கு ’ பிறகு நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்த திரைப்படம் , ' ஜீவி ' . கடையில் வெற்றி பணியாளராக வேலை செய்வார் . அங்கு அவருக்கு ஏற்படும் காதல் தோல்வி , வாழ்வில் முன்னேற்றமில்லாமல் எற்படுகிறது . அதனால் மன அழுத்ததில் பாதிக்கப்பட்டு சிறமப்படுகிறார் . சஸ்பென்ஸ் திரில்லராக வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து , ' ஜீவி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது . 

இதில் வெற்றியுடன் இணைந்து மைம் கோபி , ரோகினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர் . முக்கோண கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கி இருக்கிறார் .

' மாநாடு ' படத்தைத் தொடர்ந்து , ' ஜீவி 2 ' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார் . ' ஜீவி 2 ' படத்தின் எடிட்டராக பிரவின் கே . எல் பணியாற்றி இருக்கிறார் .

இந்த நிலையில் , ' ஜீவி 2 ' படத்தின் எடிட்டர் பிரவின் கே.எல் , " இப்போது பார்வையாளர்களை பிரமிக்க வைக்க, ' ஜீவி 2 ' தயாராகி இருக்கிறது . ஜீவி படத்தை , விட நாங்கள் சிறப்பாக  இந்த படத்தை தயார் செய்து இருக்கிறோம் . இந்த படத்தில் நாங்கள் சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம் . இது போன்ற படத்தில் நான் இது வரை பணியாற்றியதே இல்லை . மனதை வளைத்து மிகவும் புத்திசாலித்தனமாக படத்தின் கதையை இயக்குநர் எழுதி இருக்கிறார் . ' ஜீவி 2 ' படம் வெற்றிப் பெறும் ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார் . 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி