தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அது வேற மாறி காய்ச்சல்... அதுக்கு கோட்டா முடிஞ்சு போச்சு.. இனி தப்பு பண்ண மாட்டேன்" - ஓப்பனாக பேசிய ஜெயம் ரவி!

அது வேற மாறி காய்ச்சல்... அதுக்கு கோட்டா முடிஞ்சு போச்சு.. இனி தப்பு பண்ண மாட்டேன்" - ஓப்பனாக பேசிய ஜெயம் ரவி!

Oct 15, 2024, 06:33 AM IST

google News
தனக்கு வேறு மாதிரியான காய்ச்சல் வந்ததால்தான் தன்னுடைய படங்கள் தோல்வி திரைப்படங்களாக மாறியது என்று ஜெயம் ரவி பேட்டி கொடுத்து இருக்கிறார்.
தனக்கு வேறு மாதிரியான காய்ச்சல் வந்ததால்தான் தன்னுடைய படங்கள் தோல்வி திரைப்படங்களாக மாறியது என்று ஜெயம் ரவி பேட்டி கொடுத்து இருக்கிறார்.

தனக்கு வேறு மாதிரியான காய்ச்சல் வந்ததால்தான் தன்னுடைய படங்கள் தோல்வி திரைப்படங்களாக மாறியது என்று ஜெயம் ரவி பேட்டி கொடுத்து இருக்கிறார்.

பிரபல நடிகரான ஜெயம் ரவி தன்னுடைய முந்தைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததற்கான காரணத்தை சன் நியூஸ் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "என்னுடைய கடந்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது உண்மைதான். அதற்கு காரணமும் நான்தான். நான் சரியாக ஹோம் ஒர்க் செய்யவில்லை. சில நேரங்களில், சில மாணவர்கள் தேர்வு நேரங்களில் சரியாக ஹோம் செய்யாமல் விட்டு விடுவார்கள். அந்த நேரத்தில் அந்த மாணவனுக்கு காய்ச்சல் வந்திருக்கலாம். அதனால் கூட, அவரால் ஹோம் ஒர்க் ஒழுங்காக செய்யாமல் இருந்திருக்கலாம்.

இது வேறு மாதிரியான காய்ச்சல்

எல்லா மாணவர்களுக்கும் அது வரும். அந்த காய்ச்சல் வேறு மாதிரியான காய்ச்சலாக கூட இருந்து இருக்கலாம். அதன் காரணமாக, என்னால் கவனம் செலுத்த முடியாமல் போய் இருக்கலாம். எனக்கு அந்த நேரத்தில், அந்த காய்ச்சல் வந்ததால், ஒரு விதமான தெளிவு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

அண்மையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார்

இப்படி அதற்கு பல்வேறு காரணங்களை இங்கு அடுக்க முடியும். இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், நான் தவறாக ஹோம் வொர்க் செய்திருக்கிறேன் என்பது எனக்கு தெரிந்து விட்டது. ஆக, இனி ஒழுங்காக இருக்க வேண்டும். என்னுடைய கடந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்று உங்களை நான் கேட்க வைத்திருக்கக் கூடாது. ஆனால் அப்படியான சூழ்நிலை உருவாகி விட்டது. ஆனால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த இடத்தில் நான் அதை திருத்திக்கொள்ள தயாராக விட்டேன். இனி மனதை தைரியப்படுத்தி முன்னேறி செல்வேன்.

 

தைரியப்படுத்தி முன்னேறி செல்வேன்

சில பேருக்கு எதனால் தவறு நடக்கிறது என்று கூட தெரியாது. அப்படி இருப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அந்த வகையில் பார்க்கும் போது எனக்கு அது தெரிகிறது. அதுவே எனக்கு பெரிய கிஃப்ட்தான். எனக்கு இப்போது நான் செய்யக்கூடிய தவறு என்னவென்று தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் இனி அந்த தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பரிட்ச்சார்த்த முயற்சிகள் எனக்கு இனி வேண்டாம் என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால், என்னுடைய சினிமா கேரியரில் அதற்கான கோட்டா முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்.

ஒரு காலத்தில்,.என்னுடைய சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கும் போது, நான் அது போன்ற முயற்சிகளை எடுத்தேன். காரணம், எனக்கு அப்போது வயது இருந்தது. எனர்ஜி இருந்தது. ஆனால் இப்போது நான் மாஸ் படங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இது என்னுடைய ரசிகர்களுக்காக..! " என்று பேசினார்.

முன்னதாக பணம் குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு ஜெயம் ரவி பேசிய பேட்டி இங்கே!

நிறைய பணத்தை பார்த்து விட்டேன்

அதில் அவர் பேசும் போது “ நான் சிறு வயதிலேயே நிறைய பணத்தை பார்த்து விட்டேன். என்னுடைய அப்பா வீட்டிற்கு கெட்டுகெட்டாக பணத்தைக் கொண்டு வருவார். அதை பார்த்து, பார்த்து எனக்கு சிறு வயதிலிருந்தே அதன் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.

அதே நேரம் பணம் தேவையில்லை என்பதையும் யாரும் கூற முடியாது. நான் என்னுடைய புரிதலில், அந்த பணம் எவ்வளவு இருந்தால் நீ சந்தோஷமாக இருப்பாய் என்ற கேள்வியே இங்கு முக்கியமானது. உன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால், உனக்கு பணம் இன்னும் வந்தாலும் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியாது.

எனக்கு நானே இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்க பழகிக்கொள் என்று கூறிக் கொள்வேன். நம் கையில் பத்து ரூபாய் இருந்தால், அதற்கு ஏற்றார் போல செலவழிப்போம். 10 கோடி இருந்தால் அதற்கு ஏற்றார் போல நாம் செலவழிப்போம். அவ்வளவுதான்.” என்று பேசினார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி