வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவ்வளவு தான்.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஜெயம் ரவி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவ்வளவு தான்.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஜெயம் ரவி..

வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவ்வளவு தான்.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஜெயம் ரவி..

Malavica Natarajan HT Tamil
Oct 08, 2024 11:56 AM IST

தன் படத்தில் உள்ள கதாப்பாத்திரங்களை உவமையாக வைத்து, நடிகர் ஜெயம் ரவி தான் எப்படிப்பட்டவர் என விளக்கமளித்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவ்வளவு தான்.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஜெயம் ரவி..
வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவ்வளவு தான்.. மறைமுகமாக மெசேஜ் சொன்ன ஜெயம் ரவி..

பிரதர் படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா, விடிவி கணேஷ், சீதா, ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ்

இந்தப் படத்தில் பூமிகா, ஜெயம்ரவிக்கு அக்காவாக நடித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீயாகும் இந்தப் படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், இயக்குநர் ராஜேஷும், நடிகர் ஜெயம் ரவியும் கல்லூரி ஒன்றில் படத்திற்கான புரமோஷனை மேற்கொண்டனர்.

வித்தியாசமான படம்

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எம்,ராஜேஷ், பிரதர் படம் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணமாக இருக்கும். ஜெயம் ரவி உங்களை சிரிக்கவும் வைப்பார் அழவும் வைப்பார். இந்தப் படத்தில் வெளியான மக்காமிஷி பாடலில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஜெயம் ரவி நடனமாடி அசத்தியுள்ளார்.

ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் போன்ற ஜெயம் ரவி படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டிருக்கும் என்றார்.

வீட்டில் இப்படி, வெளியில் அப்படி 

பின்னர் மாணவர்களிடம் பேசிய ஜெயம்ரவி, நான் வீட்டில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் சந்தோஷ் மாதிரி இருப்பேன். ஆனால், வெளியில் வந்துவிட்டால், சம்திங் சம்திங் படத்தில் வரும் சந்தோஷ் போல் மாறிவிடுவேன். வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அவ்வளவு தான்.. வாழ்க்கை ஒருமுறை தான். அதனால், நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து விட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த பதில், மாணவர்களை உற்சாகப்படுத்த கூறினாரா அல்லது சொந்த வாழ்க்கையின் நிலையை மறைமுகமாக கூறினாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மனம் கவர்ந்தவர் அருண்மொழி

பின் நிகழ்ச்சியில் தொடரந்து பேசிய ஜெயம் ரவி, தான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் என்றால் பொன்னியின் செல்வனில் நடித்த அருண்மொழி கதாப்பாத்திரம் தான். அதன் பிறகு பேராண்மை படத்தில் நடித்த கதாப்பாத்திரம் பிடிக்கும். முதன்முதலில் எனக்கு நடிக்க வரும் என நம்பி, பெரும் முயற்சிசைய எடு்ததிருப்பார் இயக்குநர். அதனால் இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியவை அனைத்தும் குடும்ப நிகழ்வுகளுடன் ஒத்துப் போவது போல் இருக்கின்றன.

முன்னதாக, பிரதர் படத்தின் ஆடியோ லான்சுக்கு மக்காமிஷி பாடலை எழுதிய பால் டப்பா வராதது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. பின் இந்த விவகாரத்திற்கு இயக்குநர் ராஜேஷ் மன்னிப்பும் கேட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.