தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “அவங்க முன்னெடியெல்லாம் தலை என்னால தலைகுனிய முடியாது.. என் வாழ்க்கையில இப்ப வரைக்கும்” - கொட்டித்தீர்த்த ஜெயம் ரவி

“அவங்க முன்னெடியெல்லாம் தலை என்னால தலைகுனிய முடியாது.. என் வாழ்க்கையில இப்ப வரைக்கும்” - கொட்டித்தீர்த்த ஜெயம் ரவி

Oct 12, 2024, 05:28 PM IST

google News
ப்ரதர் பட புரோமோஷனில் நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.. அதில் தன்னுடைய விவாகரத்து குறித்தான வதந்திகள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
ப்ரதர் பட புரோமோஷனில் நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.. அதில் தன்னுடைய விவாகரத்து குறித்தான வதந்திகள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

ப்ரதர் பட புரோமோஷனில் நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.. அதில் தன்னுடைய விவாகரத்து குறித்தான வதந்திகள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பிரபல நடிகரான ஜெயம் ரவி, தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவியான ஆர்த்தி, இந்த முடிவு தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது என்றும், தான் ஜெயம் ரவியுடன் பேச அனுமதி கேட்டும், அவர் நேரம் கொடுக்க வில்லை என்றும் பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் ஆர்த்தி மீது பல விதமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் பதிலடியும் கொடுத்திருந்தார்.

ஆர்த்தியுடம் ஜெயம்ரவி

இந்த நிலையில் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ள ப்ரதர் திரைப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த ஜெயம்ரவியிடம் ‘நிமிர்ந்து நில்’ என்ற உங்களது முந்தையப்படத்தின் வார்த்தையை உங்கள் உண்மை வாழ்க்கையோடு ஒப்பிட்டு சொல்லுங்கள் என்று சொலப்பட்டது, அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, “உலகம் ஆயிரம் சொல்லும். ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால் நமக்கென்று, நம்மை நம்புபவர்கள் சில பேர் இருப்பார்கள். அவர்கள் நமக்கு பிடித்தவர்கள், நண்பர்கள் என யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அவர்கள் முன்னால் நாம் என்றுமே தலைகுனியக் கூடாது.

நிமிர்ந்துதான் நிற்க வேண்டும்.

அவர்கள் முன்னால் நாம் எப்போதுமே நிமிர்ந்துதான் நிற்க வேண்டும். நான் நடித்த நிமிர்ந்து நில்’ படத்தில், முதலில் என்னால் அந்த கதாபாத்திரத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், அந்த படத்தின் இயக்குநரான சமுத்திரக்கனி அண்ணனிடம் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள எனக்கு ஏதாவது சொல்லுங்கள் என்று தொல்லை செய்து கொண்டே இருந்தேன்.

ஆர்த்தியுடம் ஜெயம்ரவி

ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காமல் பேசிய சமுத்திரக்கனி, இங்கே பார் நீ நீயாக இருப்பதற்கு இங்கு பெரும் போர் புரிய வேண்டும். உன்னை நீயாக இருக்க இங்குள்ள சமூகம் விடவே விடாது. இதை மனதில் வைத்துக்கொண்டு நடி என்றார். அதன் பின்னர் எனக்கு அந்த கதாபாத்திரம் எனக்கு நன்றாகவே புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையிலும், அதுதான் மிக மிக கஷ்டமான விஷயமும் கூட. அந்த கஷ்டமான விஷயத்தை எடுத்துக்கொண்டு நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.

எதுவும் என்னை பாதிக்காது

முன்னதாக, பிஹைண்ட்உட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஜெயம் ரவி, “சோசியல் மீடியாவில், பலரும் மனதில் பட்டதை கூறி வருகின்றனர். அவர்கள் ஏதாவது பேசினால் அது என்னை பாதிக்காது. குறிப்பிட்ட சில நபர்களை மட்டுமே என் பர்சனல் வாழ்க்கைக்குள் அனுமதித்துள்ளேன். அவர்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியும். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது என்னைப் பற்றி கூறினால் மட்டும் தான் எனக்கு வலிக்கும்.

மற்றபடி, மக்கள் என் படத்தைப் பற்றியோ, என் நடிப்பை பற்றியோ, நான் விருதுக்கு தகுதி இல்லாதவன் எனவோ கூறினால் அதை ஏற்றுக் கொண்டு, அடுத்த திரைப்படத்தில் என்னை மெருகேற்றிக் கொள்வேன். ஆனால், அவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினால் கடந்து சென்று விடுவேன்.

முடிவு செய்பவன் நான்

என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன். இதைப்பற்றி யாரும் பெரிதாக பேசவோ, கவலைப்படவோ வேண்டாம். என்னை சுற்றி நடக்கும் விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும். என் குடும்பத்தினர் என்னை விட முதிர்ச்சியானவர்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி இப்படி பேசுகிறார்கள் என்ற கவலை மட்டும் தான். ஆனால், செய்த விஷயத்திற்காக அவர்களுக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.

ரசிகர்களை தடுக்க முடியாது

ரசிகர்களுக்கு நல்லது கெட்டது என அனைத்தும் தெரியும். அவர்கள் பேசுவதை என்னால் தடுக்க முடியாது. அவர்கள் தான் மிகப்பெரிய சக்தி. அவர்களால், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தையும் ஹிட் கொடுக்க முடியும், கேஜஎஃப் படத்தையும் ஹிட்டாக்க முடியும். இரண்டுக்கும் சம்பந்தமில்லை. எனவே, எது சரி, எது தவறு என்பதை அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். இதனால் என் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தைகள் நம்மை விட அறிவாளிகள்.

நானும் அக்காவும்

நாங்கள் மிகச் சிறிய குடும்பத்திலிருந்து வந்து, தற்போது மக்களிடம் நல்ல அந்தஸ்தை பெற்றுள்ளோம். எங்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலோடு உள்ளோம். என் அக்காவும், நானும் கடைசி பிள்ளைகள் என்பதால் அதிக செல்லம். எனக்கு எது தேவை என்றாலும் என் அக்கா தான் பேசுவாங்க . எனக்காக அவங்க நிறைய கடிதம் எழுதி இருக்காங்க. அதை எல்லாம் படிச்சு கண் கலங்கி இருக்கேன். இப்போவும் அவங்க எனக்கு கடிதம் எழுதிட்டு தான் இருக்காங்க.” என்று பேசினார். 

பிரதர் படம்

நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான பிரதர் படம் தீபாவளிக்கு சிறப்பாக திரைக்கு வர உள்ளது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி