Kenishaa Francis: கொண்டக்கடலை சாப்பிடுங்க..ஞானத்தை பெறுங்க! ஜெயம் ரவியுடனான ஒப்பந்த முறிவு - கெனிஷா பதில்-kenishaa francis reacts to criticism for breaking nda to talk about jayam ravi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kenishaa Francis: கொண்டக்கடலை சாப்பிடுங்க..ஞானத்தை பெறுங்க! ஜெயம் ரவியுடனான ஒப்பந்த முறிவு - கெனிஷா பதில்

Kenishaa Francis: கொண்டக்கடலை சாப்பிடுங்க..ஞானத்தை பெறுங்க! ஜெயம் ரவியுடனான ஒப்பந்த முறிவு - கெனிஷா பதில்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 01, 2024 03:46 PM IST

நடிகர் ஜெயம் ரவியுடனான வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தை முறத்ததாக உலா வரும் தகவலுக்கு பிரபல பாடகியும், ஹீலிங் தெரபிஸ்டுமா கெனிஷா பிரான்சிஸ் தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

Kenishaa Ravi recently spoke about rumours of her dating Jayam Ravi.
Kenishaa Ravi recently spoke about rumours of her dating Jayam Ravi.

சமீபத்தில் தான் அளித்த பேட்டியில், ஜெயம் ரவி தன்னிடம் தெரிபி எடுத்துக்கொள்ள வந்தவர் எனவும், ஆர்த்தி ரவியுடனான அவரது திருமணத்தைப் பற்றிய சில புரிதல்களை பகிர்ந்து கொண்டார் என்றும் கூறினார். 

வெளிப்படுத்தாத ஒப்பந்த முறிவு பற்றி கெனிஷா பிரான்சிஸ்

வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தை முறித்தது குறித்தும், ரகசிய தகவலை வெளியிடுதல் குறித்தும் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தினார் கெனிஷா. இதன் பின்னர் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பிளேட்டில் பச்சை கொண்டக்கடலை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "ஒரு சைக்காலஜிஸ்ட்க்கும், ஆன்மிக ஹீலிங் தெரபிஸ்ட்க்கும் வித்தியாசம் உள்ளது.

இதற்கான வெளிப்படுத்தாத ஒப்பந்தமும் மாறுபடுகின்றன. எனக்காக ஒரு காரியம் செய்யுங்கள். கூகுள் ஓபன் செய்து, இது பற்றி வாசித்து பாருங்கள். இதன் பின்னர் உங்களுக்கு ஞானம் பெறட்டும். அப்படியே கொஞ்சம் பச்சை கொண்டக்கடலை சாப்பிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

A screen grab of Kenishaa Francis' Instagram stories.
A screen grab of Kenishaa Francis' Instagram stories.

"கடந்த ஜூன் மாதத்தில் ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியிலும் பாதிக்கப்பட்டது தொடர்பாக ஜெயம் ரவி, ​​மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார். அவர் தனது முன்னாள் மனைவியுடன் பிரிந்ததற்கு நான்தான் காரணம் என்று ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன. அவை முற்றிலும் தவறானவை" என டிடி நெக்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கெனிஷா கூறியிருந்தார்.

ஆர்த்திக்கு சமரசம் செய்யும் எண்ணம் இல்லை

“எனக்கு விவாகரத்து வேண்டும். ஆர்த்தி கூறியபடி சமரசம் செய்ய விரும்பினால், அவள் ஏன் என்னை அணுகவில்லை? நான் அனுப்பிய இரண்டு விவாகரத்து நோட்டீஸ்களுக்கும் ஏன் பதிலளிக்கவில்லை? அவரது இந்த நடத்தை என்னுடன் சமரசம் செய்ய விரும்புகிறது போல் இருக்கிறதா? சமரசம் செய்யும் எண்ணம் இருந்தால் எனக்கு காதலி இருக்கிறார் என்கிற வதந்தி பரவுமா?” என்று ஜெயம் ரவி முன்னதாக கூறியிருந்தார்.

ஜெயம் ரவியுடன் தனியாக உரையாட வேண்டும்

ஆர்த்தி ரவி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "என் வாழ்க்கையில் நடந்துவரும் விஷயங்கள் பற்றி என்னை சுற்றி உள்ள பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நான் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவது எனது பலவீனத்தின் காரணமாகவோ, குற்ற உணர்ச்சியின் காரணமாகவோ அல்ல. நான் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அத்துடன் உண்மையை மறைக்க சிலர் என்னை மிக மோசமாக சித்தரித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் முயற்சி செய்துள்ளேன்.

தெளிவாக சொல்ல வேண்டுமானால், எனது முந்தைய அறிவிப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரவி வெளியிட்ட விவகாரத்து அறிவிப்பானது எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்றுதான் கூறினேன். அந்த விவகாரத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று நான் கூறியதாக, என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. இவை எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் நான், ஜெயம் ரவியுடன் தனியாக கலந்துரையாட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்." என்று குறிப்பிட்டிருந்தார்.

என்ன நடந்தது

பல வார வதந்திகளுக்குப் பிறகு, ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9 தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததை உறுதிப்படுத்தினார். ஆர்த்தி செப்டம்பர் 11 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஜெயம் ரவியின் இந்த அறிக்கையை தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், இதுபற்றி பொதுவெளியில் தெரிவித்ததால் ஆழ்ந்த மனவேதனையில் இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 2009இல் திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.