தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Janhvi Kapoor Wish To Act With Vijay Sethupathi

Janhvi kapoor: விஜய் சேதுபதியிடம் வாய்ப்பு கேட்ட ஜான்வி

Aarthi V HT Tamil

Dec 06, 2022, 09:53 AM IST

நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்த பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஜான்வி கூறினார். (HT_PRINT)
நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்த பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஜான்வி கூறினார்.

நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்த பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஜான்வி கூறினார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறினார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Kubera Nagarjuna: 'குபேரா' மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கும் நாகார்ஜூனா.. தரமான ஃபர்ஸ்ட் லுக்.. ரட்சகனை மறக்க முடியுமா?

MTV Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Music Director Ilayaraja: ‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்..’: மொரிஷியஸில் தனிமையைப் போக்கும் இளையராஜா

அத்துடன் நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்த சம்பவம் குறித்து நினைவு கூர்ந்தார்.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த ஜான்வி, “நான் விஜய் சேதுபதியிடம் பேசினேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நானும் ரவுடி தான் படத்தை 100 ஆவது முறையாக பார்த்த பிறகு, அவருக்கு போன் செய்தேன். 

நான் உங்களின் பெரிய ரசிகை, நீங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கான ஆடிஷனில் கலந்து கொள்வேன். நான் உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என அவரிடம் சொன்னேன்” என்றார். 

அதற்கு அவர்” ஐயோ… ஐயோ… என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா அல்லது வெட்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஆர்வமாக இருந்ததால் அவர் ஆச்சரியப்பட்டார்” என்றார்.

ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் மிலி படம் வெளியானது. மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்காகும். அடுத்தாக வருண் தவானுடன் பவால் மற்றும் ராஜ்குமார் ராவுடன் திரு மற்றும் திருமதி மஹி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.