Jani Master: ‘ஹலமிதி ஹபி போ’..வீடு.. படப்பிடிப்பு..6 மாதங்களில் அவ்வளவு செக்ஸ் டார்ச்சர்!-ஜானி மாஸ்டர் மீது வழக்குபதிவு!
Sep 17, 2024, 08:35 AM IST
Jani Master: கடந்த 6 மாதங்களாக அவரது குழுவில் பணியாற்றிய வந்த தன்னை ஜானி மாஸ்டர், வெளிப்புற படப்பிடிப்பில் இருக்கும் போது நார்சிங்கில் இருக்கும் அவரது வீடு உட்பட பல இடங்களில் என்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டு இருந்தார். - ஜானி மாஸ்டர் மீது பாய்ந்த வழக்கு!
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல், ‘பட்டாஸ்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜில் ப்ரோ’பாடல், விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ‘ஹலமிதி ஹபி போ’ பாடல், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடல், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம் பெற்ற ‘காவாலா’ உள்ளிட்ட பல ப்ளாக்பஸ்டர் ஹிட் பாடல்களுக்கு ஜானி மாஸ்டர் நடன வடிவமைப்பு செய்திருக்கிறார். ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு அண்மையில் இவருக்கு சிறந்த நடன வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
21 வயது பெண் பாலியல் புகார்
இவர் மீது அவரது நடனக் குழுவில் பணியாற்றும் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, அண்மையில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், கடந்த 6 மாதங்களாக அவரது குழுவில் பணியாற்றிய வந்த தன்னை ஜானி மாஸ்டர், வெளிப்புற படப்பிடிப்பில் இருக்கும் போது நார்சிங்கில் இருக்கும் அவரது வீடு உட்பட பல இடங்களில் என்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப்பெண், மேலும் இந்த சந்தர்ப்பங்களில் அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமல்லாமல், தன்னை அடித்தும் காயப்படுத்தி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
வழக்குப்பதிவு
இந்தப்புகாரை ஏற்றுக்கொண்ட ராய்துர்கம் காவல்துறையினர் ஜானி மாஸ்டர் மீது சட்டப்பிரிவு 376. 506, 323 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வழக்கை நாரங்கி காவல்நிலையத்திற்கு மாற்றி விசாரணையை முடுக்கி விட்டு இருக்கின்றனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்த ஜானி மாஸ்டரை, கட்சி தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு பெண் ஒருவரை துன்புறுத்தி அடித்த வழக்கில் ஜானி மாஸ்டர் ஜெயிலுக்கு சென்று வந்தார். அதே போல கடந்த வருடம் சதீஷ் என்ற நடனவடிவமைப்பாளர் வாய்ப்பு கேட்டு சென்ற போது ஜானி மாஸ்டர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்