தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  James Vasanthan: ‘சொல்ல வேண்டிய கட்டாயம்… ’ - விஜய் ஆடை குறித்து ஜேம்ஸ் வசந்தன்

James Vasanthan: ‘சொல்ல வேண்டிய கட்டாயம்… ’ - விஜய் ஆடை குறித்து ஜேம்ஸ் வசந்தன்

Aarthi V HT Tamil

Jan 08, 2023, 10:43 AM IST

google News
விஜய் ஆடை குறித்து சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது என ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.
விஜய் ஆடை குறித்து சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது என ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.

விஜய் ஆடை குறித்து சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது என ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விஜய் சமீப காலமாகத் தனது பட நிகழ்ச்சிகளில் கோட் - சூட் அணிவது இல்லை. அதே போல் வாரிசு இசை வெளியீட்டிற்கும் எளிமையாக வந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

அவரது ஆடை குறித்து இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளபக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “'வாரிசு' பட விழா தொலைக்காட்சியில் போய் கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிப்படுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.

இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாகப் பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்ல வேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜ வாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொது மேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே.

ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்ட வெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன் தான்!

முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார். அவரின் கருத்து விஜய் ரசிகர்கள் 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், “இவ்வளவு பெரிய நடிகரை விமர்சனம் செய்து பொது வெளியில் என்னைத் தவிர தமிழ்நாட்டில் ஒருத்தரும் எழுத மாட்டாங்கனு எனக்கு தெரியும். 

ஆனால் சொல்லியாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்த காரணத்தினால் தான் நான் எழுதுனேன். இவ்வளவு பெரிய நட்சத்திரத்தை விமர்சித்தால், அவரது ரசிகர்கள் என்னிடம் எந்த அளவுக்கு நடந்து கொள்வார்கள் என எனக்கு தெரியாதா என்ன ? 27 வருடங்களாக தமிழ் ஊடகத்தில் இருக்கிறேன். 

ஆனால் எனக்கு மூத்த ஊடகவியலாளராக எனக்கு ஒரு கடமை இருக்கு. எதிர்ப்புகளை பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை'' என குறிப்பிட்டு உள்ளார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி