தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Boxoffice: ‘முதல் நாளே ரூ.100 கோடியை தாண்டிய ஜெயிலர்’ தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வசூல் நிலவரம்!

Jailer BoxOffice: ‘முதல் நாளே ரூ.100 கோடியை தாண்டிய ஜெயிலர்’ தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை வசூல் நிலவரம்!

Aug 10, 2023, 08:09 PM IST

google News
ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. (Sun Pictures)
ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதோ அதோ என்று ஒரு வழியாக உலகம் முழுவதிலும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த், தன்னுடைய ரசிகர்களுக்கு போதிய தீனி போட்டுள்ளார் என்கிற அளவில் விமர்சனங்கள் வந்துள்ளன. கட்டாய வெற்றியை தர வேண்டிய கட்டாயத்தில் இருந்த இயக்குனர் நெல்சன், தனது பாணியில் வெற்றியை பெற்றிருக்கிறார் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

அனிருத் இசை, கதாபாத்திரங்கள் தேர்வு என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பு இருந்ததால், ஜெயிலர் படத்தின் வெற்றி உறுதியானதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். என்ன இருந்தாலும், படத்தின் ஒன் மேன் ஆர்மி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 

அந்த வகையில், சூப்பர் ஸ்டாருக்கு பெரிய வெற்றியை நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெயிலர் தந்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் தான் , அவர் இமய மலைக்குச் சென்றதாகவும் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்பதிவை அடிப்படையாக வைத்து உத்தேசமாக கணிக்கப்பட்ட முடிவுகளின் பட,  ஜெயிலர் திரைப்படம் முதல்நாள் வசூல் அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, முதல் நாள் மட்டும் 105 கோடி ரூபாய் வரை ஜெயிலர் வசூல் சாதனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

உத்தேச பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்:

  • தமிழ்நாடு- ரூ.26 கோடி முதல் ரூ.28 கோடி
  • ஆந்திரா/ தெலங்கானா- ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி
  • கர்நாடகா- ரூ.11 கோடி முதல் ரூ.13 கோடி
  • கேரளா- ரூ.4.5 கோடி முதல் ரூ.6 கோடி
  • இந்திய நகரங்கள்- ரூ.10 கோடி வரை
  • வெளிநாடு- ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி

முதல் நாள் வசூலாக ரூ.85 கோடி முதல் 105 கோடி வரை வசூலாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள், துல்லியமான விபரங்களை தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட வாய்ப்பு உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி