தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Monisha Nelson: ‘அதிர்ச்சியில உறைஞ்சு போய் இருக்கேன்; எல்லாமே பொய்’ - அறிக்கை வெளியிட்டு ஆதங்கம் தீர்த்த மோனிஷா!

Monisha Nelson: ‘அதிர்ச்சியில உறைஞ்சு போய் இருக்கேன்; எல்லாமே பொய்’ - அறிக்கை வெளியிட்டு ஆதங்கம் தீர்த்த மோனிஷா!

Aug 22, 2024, 10:02 AM IST

google News
Monisha Nelson: பல்வேறு தளங்களில் கிருஷ்ணன் என்பவருடன் மோனிஷா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். - மோனிஷா நெல்சன் அறிக்கை!
Monisha Nelson: பல்வேறு தளங்களில் கிருஷ்ணன் என்பவருடன் மோனிஷா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். - மோனிஷா நெல்சன் அறிக்கை!

Monisha Nelson: பல்வேறு தளங்களில் கிருஷ்ணன் என்பவருடன் மோனிஷா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். - மோனிஷா நெல்சன் அறிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய மொட்டை கிருஷ்ணனுக்கு, பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா லட்சக்கணக்கில் பணபரிவர்த்தனை செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மோனிஷா சார்பாக, அவரது வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், “ என்னுடைய மனுதாரர் மோனிஷா, பிரபல இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான நெல்சன் திலீப் குமாரின் மனைவி ஆவார். எனது வாடிக்கையாளருக்கு எதிராக பல ஆன்லைன் தளங்கள், செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியாகி இருக்கின்றன. 

போலீஸ் சம்மன் அனுப்பினர்

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி என்னுடைய மனுதாரர் மோனிஷாவிற்கு, கிருஷ்ணன் என்பவருடன் பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கு என்னுடைய மனுதாரர் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அவருக்குரிய விளக்கத்தை அளித்தார். 

ஆனால் பல்வேறு தளங்களில் கிருஷ்ணன் என்பவருடன் மோனிஷா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. 

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் 

ஆகையால் எனது வாடிக்கையாளரை பற்றி ஆதராமற்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்க்கவும். எனது மனுதாரரின் உணர்ச்சிகளை புண்படுத்தும் வகையில் ஆதாரமற்ற முறையில் வெளியான அனைத்து செய்திகளும் கண்டிக்கத்தக்கது. அவை அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி