தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Jacqueline Fernandez To Be Accused In 200 Crore Extortion Case

ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு

Aarthi V HT Tamil

Aug 17, 2022, 07:16 PM IST

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களுடன் இவருக்கு நட்பு இருக்கிறது. அத்துடன் இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Kubera Nagarjuna: 'குபேரா' மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கும் நாகார்ஜூனா.. தரமான ஃபர்ஸ்ட் லுக்.. ரட்சகனை மறக்க முடியுமா?

MTV Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்

Music Director Ilayaraja: ‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்..’: மொரிஷியஸில் தனிமையைப் போக்கும் இளையராஜா

பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அமலாக்கத்துறை, சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமாக சென்னை, பெங்களூருவில் இருக்கும் பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யதனர்.

இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி ரூபாய் அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்து இருப்பது தெரிய வந்தது. 

சில மாதங்களுக்கு முன்பு கூட ஜாக்குலின் பெர்னான்டஸ் வெளிநாடு செல்ல முயன்ற போது, மும்பை விமான நிலையத்தில் அமலாக்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டர். 

பின்பு விசாரணை நடத்தி அவருக்கு சொந்தமான 7.27 கோடி ருபாய் பணத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர். இதன்மூலம் அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்து உள்ளனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.