தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jabar Sathik Case: ’ஜாபர் சாதிக் மனைவியிடம் பணம் பெற்றேனா?’ பொய் சொல்வதே பொழப்பா! கிளர்ந்து எழுந்த இயக்குநர் அமீர்!

Jabar Sathik Case: ’ஜாபர் சாதிக் மனைவியிடம் பணம் பெற்றேனா?’ பொய் சொல்வதே பொழப்பா! கிளர்ந்து எழுந்த இயக்குநர் அமீர்!

Kathiravan V HT Tamil

Jul 25, 2024, 09:18 PM IST

google News
தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார் சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்டவர்கள் என அமீர் அவேசம்!
தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார் சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்டவர்கள் என அமீர் அவேசம்!

தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார் சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்டவர்கள் என அமீர் அவேசம்!

ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்து உள்ளார். 

வெளிநாடுகளுக்கு போதை பொருட்களுக்கான மூலப் பொருட்களை கடத்திய புகாரில் சினிமா தயாரிப்பாளர் ஆன ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ஏற்கெனவே கைது செய்து உள்ளது.

துளியும் உண்மை இல்லை 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து 4 வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (23.07.24) அன்று தினத்தந்தி, தினமலர், News7 உள்ளிட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறான தகவல்களை வெளியிடுகின்றனர்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே தங்களது நன் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர, வெறொன்றும் கிடைக்கப் போவது இல்லை.

இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே NCB மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை நான் வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில் என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைகள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

என்னுடைய வேறு குறைகள் ஏதுமில்லை 

அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார் சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்ட இது போன்ற நபர்கள், "இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து எப்படியாவது இந்த வழக்கில் என்னைச் சேர்த்துக் கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன்? மத்திய மாநில அரசுகளோ, தனி நபரோ மானுடம் கொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம். ஒரு சக மனிதனாக தோழனாக, சுயநல நோக்கின்றி எனது எதிர் கருத்துகளையும் போராட்ட செயல்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளேன் என்பதைத் தவிர என்னிடம் வேறு குறைகள் ஏதும் இல்லை.

சட்டவிரோத பண பரிவர்தனையில் ஈடுபடவில்லை 

என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சிந்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு - அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல.! என்பதையும், எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ நான் ஒரு போதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள, பொறுப்புள்ள ஊடகங்கள் தங்களது ஊடக தர்மத்தை மறந்து நேர்மைக்கு மாறாக இது போன்ற செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிட வேண்டாம் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அமீர் கூறி உள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை