12 Years of Attakathi :’ஆடிபோனா ஆவணி' நடுத்தர குடும்ப இளைஞரின் கல்லூரி வாழ்க்கை.. பா. ரஞ்சித் சிறந்த படைப்பு அட்டகத்தி!
Aug 15, 2024, 06:22 AM IST
12 Years of Attakathi : சென்னை புறநகர் பகுதியில் வாழும் ஒரு நடுத்தர குடும்ப இளைஞரின் கல்லூரி வாழ்க்கையை நகைச்சுவை, எதார்த்தம், பேண்டஸி என அனைத்து கலத்தும் அட்டகத்தி படத்தில் கொடுத்திருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித்.
காதலை கொண்டாடிய தமிழ் படங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் காதல் தோல்வியை ஒரு கொண்டாட்டமாக காட்டி படமாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் அட்டகத்தி அமைந்திருந்தது.
எப்படியாவது காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் நாயகன் தினேஷ். இவருக்கு என ஒரு குழு உள்ளது. அக்குழு பெயர் லவ்வர்ஸ் பாய்ஸ். பெண்களை கவர செய்யும் அந்த குழுவில் தினேஷுக்குத்தான் எந்த பெண்ணும் செட் ஆகாது. அப்படியாக அவர் வளர்க்கும் காதல் ஒன்று இறுதியில் கைகூடியதா என்பது தான் அட்டகத்தி கதை. மொத்தப் படமுமே பெரிய ஜாலியாகவே கடக்கும்.
தினேஷ் மொக்கை வாங்கும் காட்சி
இப்படத்தில் தினேஷ் மொக்கை வாங்கும் காட்சிகள் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தும். பேருந்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு பதிலாக தினேஷை அடிக்கும் காட்சியில், இரு பெண்கள் முன்னால் அவமானப்பட்டுவிட்டோம் என அவமானப்பட்டு நிற்கும் காட்சியும், கராத்தே மாஸ்டரிடம் அடிவாங்கிவிட்டு என அழுதுகொண்டிருக்கும் போது, பெண் வருகிறாள் என சொன்னதுமே அடுத்த நொடியை உடல்மொழியையும், முகபாவனைகளையும் மாற்றுவது என மொத்த படத்தையும் தன் வசப்படுத்தியிருப்பார் நாயகன் தினேஷ்.
பேருந்தில் ஓரக்கண்ணால் தினேஷைப்பார்ப்பது, கோபத்துடன் உதட்டை முணுமுணுப்பது என நந்திதாவும் தேவையான நடிப்பில் அசத்தி இருப்பார். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்த காதல் தோல்வியின் மூலம் அட்டகத்தியாக நின்ற தருணத்தை கண்முன்னே பிரதிபலிக்கும் விதமாக இந்தப் படம் அமைந்திருந்தது.
நடுதர இளைஞர்களின் வாழ்க்கை
இளைஞர்களின் காதலை வைத்து பல்வேறு படங்கள் வந்திருந்தாலும் அதில் நகைச்சுவையுடன் கூடிய எதார்த்த வாழ்க்கையை கலந்த படமாக இருக்கும் அட்டகத்தி மூலம்தான் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய பா. ரஞ்சித் தற்போது டாப் இயக்குநர் பட்டியலில் உள்ளார்.
முற்றிலும் புதுமுகங்களோடு உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் முதல் டீஸர் வரை அனைத்து கவனம் பெற்றதோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின.வெறும் கல்லூரி காலத்து காதல், ஒன் சைடு லவ் என்றில்லாமல் நடுதர இளைஞர்களின் வாழ்க்கையை கண்முன்னே அப்படியே அட்டகத்தி படத்தில் நிறுத்தியிருப்பார்.
அனைத்து பாடல்களும் ஹிட்
சென்னை புறநகர் பகுதியில் வாழும் ஒரு நடுத்தர குடும்ப இளைஞரின் கல்லூரி வாழ்க்கையை நகைச்சுவை, எதார்த்தம், பேண்டஸி என அனைத்து கலத்தும் அட்டகத்தி படத்தில் கொடுத்திருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித்.
இப்படத்தில் இடப்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட். சந்தோஷ் நாராயணன் இசையில் கானா பாலா எழுதி பாடிய,
”நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா" என தத்துவ பாடலை சிம்பிள் வரிகளால் எளிமையாக கொடுத்து மக்கள் மனதில் புகுத்தி இருப்பார்கள்,
அதேபோல இப்படம் என்றலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பாடல், “ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி”
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. பா. ரஞ்சித் டாப் இயக்குநராக வலம் வந்தாலும் அவரின் சிறந்த படைப்பாக அட்டகத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.