தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Bhanupriya: முட்டக் கண்ணு.. வசீகர முகம்.. இயல்பான நடிப்பு.. சென்னை பாஷையில் கலக்கிய சைதை தமிழரசி பிறந்தநாள் இன்று!

HBD Bhanupriya: முட்டக் கண்ணு.. வசீகர முகம்.. இயல்பான நடிப்பு.. சென்னை பாஷையில் கலக்கிய சைதை தமிழரசி பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil

Jan 15, 2024, 06:14 AM IST

google News
நடிகை பானுப்பிரியா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
நடிகை பானுப்பிரியா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

நடிகை பானுப்பிரியா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

நடிகை பானுப்பிரியா 1967 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார். பிறகு சென்னையில் குடும்பத்தோடு குடி பெயர்ந்திருக்கிறார். 1980களிலும், 90களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. தமிழ் சினிமாவில் ஒரு எதார்த்தமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா. 

கருப்பு நிறம், முட்டக் கண்ணு, வசீகர முகம். இயல்பான நடிப்பு. அபார நடனம் இத்தகைய தனித்துவ குணங்களால் ரசிகர்களைக் கொள்ளைகொண்டவர் பானுப்ரியா. எந்த கதாபாத்திரமானாலும் திறம்பட நடித்துக் கொடுப்பவர். சென்னை பாஷையில் பேசி கலக்கியவர்.

இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா. பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு அபிநயா என்கிற ஒரு மகளும் இருக்கிறார். கடைசியாக கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும், அசோக் செல்வம் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்களையும் நடித்திருக்கிறார்.

இவர் சன் டிவியில் சக்தி சீரியலிலும், அதைத் தொடர்ந்து வாழ்க்கை, கோபி ஏவிஎம், பொறந்த வீடா புகுந்த வீடா, ஆஹா என பல ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். நடிகை பானுப்ரியா மூன்று மாநில நந்தி விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் இரண்டு எக்ஸ்பிரஸ் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

பரதநாட்டிய கலைஞரான இவர், கதாநாயகியாக மட்டுமல்லாமல் தன்னுடைய சமகாலத்தில் நாயகியாக நடித்த பலருக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். தனியாக நடனப் பள்ளி நடத்தி வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

பங்காளி திரைப்படத்தில் இவரின் நடிப்பும் சென்னை பாஷையும் யாராலும் மறக்க முடியாது. நாயகன் சத்தியராஜ் ஒரு அசைவ ஹோட்டலில் லெக் பீசா தின்னுட்டு பில்லு குடுக்க காசில்லாம உக்காந்திருக்கும் போது. “சைதை தமிழரசி தாக்கப்பட்டார்… ஒரு கண்ணீரில்லையா, கம்பலையில்லையா, கடையடைப்பு இல்லையா” அப்படீன்னு கத்திக்கிட்டே கவுண்டமணி ஓடி வருவாரு.

ரெண்டு பேருமா சேந்து கடைகள எல்லாம் அடிச்சு நொறுக்கி அவுங்களுக்கு வேண்டியத எல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. மறுநாள் சைதை தமிழரசிக்காக நிதி திரட்டுறதுக்காக வீடு வீட போவங்க. அப்படிப் போகும்போது பானுப்பிரியா வீட்டுக்கும் போவாங்க. அவுங்க கிட்டயும் நிதி கேப்பாங்க. ஆனா, பானுப்பிரியா தான் அவுங்க சொன்ன சைதை தமிழரசி.

அதன்பிறகு அங்கு நடக்கும் கலவரமும் சைதை தமிழரசியாக பானுப்பிரியா நடித்து அசத்திய காட்சியும் குறிப்பாக மேடையில் அவர் பேசி அசத்தும் காட்சியும் பானுப்பிரியாவின் அடையாளமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். மக்களுக்கு பானுப்பிரியா என்பதை விட சைதை தமிழரசி என்றால் நன்கு தெரியும் அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து இருப்பார். இன்று இவரின் பிறந்தநாள்.இன்றைய தினம் அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி