தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2 Box Office: முதலுக்கே மோசம்.. கழுவி ஊற்றும் மக்கள்..திணறும் பாக்ஸ் ஆபிஸ் இந்தியன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?

Indian 2 Box office: முதலுக்கே மோசம்.. கழுவி ஊற்றும் மக்கள்..திணறும் பாக்ஸ் ஆபிஸ் இந்தியன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?

Jul 20, 2024, 09:54 AM IST

google News
இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ்: கடந்த சில நாட்களாக படத்தின் வருவாய் சரிவைக் கண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்தியன் 2 திரைப்படம் வசூல் செய்த தொகை இவ்வளவுதான்!
இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ்: கடந்த சில நாட்களாக படத்தின் வருவாய் சரிவைக் கண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்தியன் 2 திரைப்படம் வசூல் செய்த தொகை இவ்வளவுதான்!

இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ்: கடந்த சில நாட்களாக படத்தின் வருவாய் சரிவைக் கண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்தியன் 2 திரைப்படம் வசூல் செய்த தொகை இவ்வளவுதான்!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வசூலில் மேலும் சரிவை சந்தித்துள்ளது. 

Sacnilk.com தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இந்தியாவில், இந்தியன் 2 திரைப்படம் தோராயமாக, வெறும்  72 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது. 

இந்தியன் 2 உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? 

இந்தியன் 2 திரைப்படம், முதல் வாரத்தில், தமிழில் 48.7 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தியில் 5.4 கோடி ரூபாயும், தெலுங்கில் 16.3 கோடி ரூபாயையும், வசூல் செய்தது. படம் வெளியாகி நேற்றோடு 8 நாட்கள் ஆகி உள்ள நிலையில், நேற்றைய தினம் இந்தியன் 2 திரைப்படம், வெறும் 1.15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. 

ஆக, மொத்தமாக பார்க்கும் போது இந்தியாவில் இதுவரை இப்படம் ரூ.71.55 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை, நேற்றைய தினம் தமிழில் 12.82 சதவீதத்தினர் மட்டுமே பார்த்து இருக்கிறார்கள். 

முன்னதாக, இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக வந்த விமர்சனங்களுக்கு, நடிகர் பாபி சிம்ஹா பதிலடி கொடுத்து இருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது,"எல்லோருமே தன்னை மிகவும் அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நன்றாக இருக்கிறது என்றால், அது நன்றாக இருக்கிறது என்று சொன்னால், அவரை முட்டாள் என்று நினைத்துக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். 

வேண்டுமென்றே ஒன்றை நொட்ட சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவாளிகளை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமக்கு தேவையானவர்கள், பார்வையாளர்கள்தான். திரையரங்கில், குடும்பத்துடன் வரும் மக்களை பார்த்தாலே, நமக்கு தெரிந்துவிடும். நமக்கு அவர்கள்தான் நமக்கு தேவையே தவிர்த்து அறிவாளிகள் நமக்கு தேவையில்லை. அறிவாளிகள் அவர்கள் அறிவை வைத்து படம் எடுத்துக் கொள்ளட்டும்” என்று பேசி இருந்தார். 

மீண்டும் சேனாபதியாக கமல்

இந்தியன் முதல் பாகத்தில் சுதந்திர போராட்ட தியாகி, லஞ்சம் வாங்குபவர்கள் குத்தி கொலை செய்யும் முதியவராக சேனாபதி என்ற கதாபாத்திரத்தில், கமல்ஹாசன் நடித்திருப்பார். அதில் இந்தியாவின் பண்டைய தற்காப்பு கலையாக திகழும் வர்மக்கலை வெளிப்படுத்தி கொலை செய்வதும், தப்பிப்பதும் என தூள் கிளப்பியிருப்பார். இதைத்தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இந்தியன் 2 படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தை உயிர்பித்துள்ளனர். படத்தில் அவர் 106 வயது முதியவராக தோன்றியுள்ளார்.

கமலின் சேனாபதி கதாபாத்திரமும், அதுதொடர்பான சில காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திருந்தபோதிலும், ஒட்டு மொத்தமாக படத்தின் திரைக்கதை அழுத்தமாக இல்லை என ரசிகர்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு தற்போது பாபி சிம்ஹா பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் கமலுடன், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் மற்றும் மறைந்த நடிகர்களான விவேக், மாரிமுத்து உள்பட பலரும் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், பின்னணி இசை பெரிதாக பேசப்படவில்லை.

இந்தியன் 2 நீளம் குறைப்பு

முன்னதாக, தொடர்ந்து சந்தித்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக, அதிரடி முடிவாக இந்தியன் 2 படத்தின் நீளத்தை சுமார் 12 நிமிடம் வரை படக்குழுவினர்கள் குறைத்தனர். ரிலீஸின் போது 3 மணி நேரம் வரை இருந்தது. தற்போது ட்ரிம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வரும் நிலையில், இ-சேவா சங்கத்தினர் படத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தனர். 

படத்தில் ஒரு காட்சியில் ஆதார் கார்டு வழங்குவதற்கு இ-சேவா ஊழியர் ரூ. 300 லஞ்சம் பெறுவது போல் காட்சி அமைந்திருக்கும். இதைத்தொடர்ந்து இந்த காட்சிக்கு ஆட்சோபனை தெரிவித்த இ-சேவா சங்கத்தினர், குறிப்பிட்ட காட்சியை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இ-சேவா பணியாளர்களை இழிவுபடுத்தும் விதமாக இந்த காட்சி இருப்பதாக புகார் தெரிவித்திருப்பதுடன், குறிப்பிட்ட காட்சியை நீக்குவதற்கு அரசு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை வெடித்தால் படத்தின் நீளம் மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி