Salman Khan: மான் வேட்டை விவகாரம்; மன்னிப்புக்கேட்ட முன்னாள் காதலி; ‘மான கொன்னது சல்மான் அதனால அவன்தான்-பிஷ்னோய் சமூகம்
May 14, 2024, 05:57 PM IST
எங்கள் 29 விதிகளில் ஒன்று மன்னிப்பு என்பதால், அவரை மன்னிப்பது பற்றி எங்கள் சமூகம் சிந்திக்கலாம். இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றும், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பணியாற்றுவேன் என்றும் சல்மான் உறுதிமொழி எடுக்க வேண்டும் - பிஷ்னோய் சமூகம்
1998 பிளாக்பக் வழக்கு
கடந்த 1999ம் ஆண்டு ராஜஸ்தான் அருகே, ஹம் சாத் சாத் ஹைன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, சல்மான்கான் பிளாக்பக் என்ற அரிய வகை மானை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், பிளாபக் மானை தங்கள் சமூகத்தின் புனித விலங்காக பார்க்கும் பிஷ்னோய் சமூகம், சல்மான் கான், தங்கள் மானை வேட்டையாடியதற்காக, தங்களின் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரை கொல்வோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர். தொடர்ந்து பல்வேறு கொலை முயற்சிகளையும் அவர்கள் அரங்கேற்றினர்.
ஆனால் சல்மான்கான் எதற்கும் காதுகொடுக்காமல் அவரது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சல்மான் கானின் முன்னாள் காதலியான சோமி சல்மான் கான் சார்பில் மன்னிப்புக்கேட்டார்.
'அவர் சார்பாக வேறு யாரும் மன்னிப்பு கேட்க முடியாது'
இதற்கு பிஷ்னோய் சமூகம் "சல்மான் முன்வந்து மன்னிப்பு கேட்டால், எங்கள் சமூகம் அவரது மன்னிப்பை பரிசீலிக்கும். ஏனெனில், தவறு சோமி அலி செய்யவில்லை, சல்மான்தான் தவறு செய்தார்.
அவர் சார்பாக வேறு யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அவரே கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்டால், எங்கள் 29 விதிகளில் ஒன்று மன்னிப்பு என்பதால், அவரை மன்னிப்பது பற்றி எங்கள் சமூகம் சிந்திக்கலாம். இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றும், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பணியாற்றுவேன் என்றும் சல்மான் உறுதிமொழி எடுக்க வேண்டும், பின்னர் அவரை மன்னிக்கும் முடிவை பரிசீலிக்கலாம்.” என்று கூறியிருக்கிறது.
பிஷ்னோய் சமூகத்தினரிடம் சோமி அலி மன்னிப்பு
இந்துஸ்தான் டைம்ஸ் உடனான சமீபத்திய நேர்காணலில் சோமி பேசும் போது, “ நான் வேட்டையாடுவதை ஒரு விளையாட்டாக ஆதரிக்கவில்லை, ஆனால் இந்த நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
1998 ஆம் ஆண்டில் சல்மான் மிகவும் இளமையாக இருந்தார். பிஷ்னோய் பழங்குடியினரின் தலைவரை அதை மறந்துவிட்டு முன்னேறுமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
அவர் தவறு செய்திருந்தால் சல்மான் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து அவரை மன்னித்து விடுங்கள்.
மேலும் , "ஒருவரின் உயிரைப் பறிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அது சல்மானாக இருந்தாலும் சரி அல்லது ஒரு சராசரி சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி. நீதி வேண்டுமென்றால், நீதிமன்றம் செல்ல வேண்டும். அமெரிக்காவைப் போலவே இந்தியாவின் நீதித்துறை மீதும், வழக்கறிஞர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
சல்மான் கானுக்கு தீங்கு விளைவிப்பது மானை மீண்டும் கொண்டு வராது என்று பிஷ்னோய் சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். கடந்து போனவை கடந்தவையாக இருக்கட்டும்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்