தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'எப்பவும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்..அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கல’:ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா

'எப்பவும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்..அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கல’:ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா

Marimuthu M HT Tamil

Nov 24, 2024, 02:19 PM IST

google News
'அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்.. அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை’- ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா பானுவின் பேச்சால் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
'அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்.. அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை’- ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா பானுவின் பேச்சால் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

'அவரை வாழ்நாள் முழுவதும் நம்புவேன்.. அவர் ஒரு ரத்னம்.. அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை’- ஏ.ஆர்.ஆர் பற்றி திடீர் டிவிஸ்ட் தந்த சாய்ரா பானுவின் பேச்சால் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர் எனவும், அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் என்றும் சாய்ரா பானு மிக உருக்கமாக வாய்ஸ் மெசேஜ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக சாய்ரா பானு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’எல்லோருக்கும் எனது நண்பகல் வணக்கம். இங்கே பேசுறது சாய்ரா பானு. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலமின்மையால், சந்தோஷமாக இல்லை. அதனால் தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிகிறேன்.

நான் ஒட்டுமொத்த யூடியூபர்களுக்கும் தமிழ் ஊடகத்தினருக்கும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவரைப் பற்றி தவறாக செய்திபோடாதீர்கள். மனிதர்களில் அவர் ஒரு ரத்தினம். உலகத்திலேயே சிறந்த மனிதர். ஆம். எனது உடல்நிலைப் பிரச்னைகளால் நான் மும்பையில் சிகிச்சைப் பெற்று வருகின்றேன்.

ஏ.ஆர்.ரஹ்மானை அந்தளவுக்கு விரும்புகிறேன்: சாய்ரா பானு

ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் அவரது பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதனால் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனக்கு நிறைய கவனிப்பு வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர். அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள். அவரை நான் வாழ்நாள் முழுவதும் நம்புவேன். அந்தளவுக்கு நான் அவரை விரும்புகிறேன். அவரும் என்னை விரும்பினார்.

அவர் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் நிறுத்தவேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அவரை தனிமையில் விட்டு வந்தபின், அவருக்குண்டான இடத்தைக்கொடுக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை. நான் விரைவில் சென்னை வருவேன். என்னுடைய சிகிச்சைகளை முடித்தபின் நான் சென்னைக்கு வருவேன். எனவே, ஏ.ஆர். ரஹ்மான் பற்றி அவதூறு பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி செய்வது ஒரு குப்பைத்தனம். அவர் ஒரு வைரம் போன்ற மனிதர்'' என சாய்ரா பானு உருக்கமாகப் பேசியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு விவகாரத்தை அறிவித்தவுடன், சில மணிநேரத்தில் தற்செயலாக ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் பாடும் பாடகி மோகினி டே என்பவரும் கணவரை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் பிரிவுக்கு மோகினி டே தான் காரணம் என யூட்யூபில் சகட்டுமேனிக்குப் பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். அதன் தொடர்ச்சியாகவே, சாய்ரா பானு இந்த வாய்ஸ் நோட்டை வெளியிட்டிருக்கிறார்.  இது ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. 

முன்னதாக சாய்ரா பானு வழக்கறிஞர் மூலம் கூறியது:

சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவியாக இருந்த சாய்ரா பானு, ரஹ்மானை பிரிவதாகக் கூறி அறிவித்து இருந்தார். சாய்ரா பானு, அவரது வழக்கறிஞர் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “ ஏ. ஆர். ரஹ்மானுடன் பல வருடங்களாக மணவாழ்வில் இருந்த சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

இந்த முடிவை அவர், அவர்களது உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்னையால் ஏற்பட்ட அழுத்தத்திற்கு பிறகு எடுத்துள்ளார். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகளுக்கு இடையே நிலவிய பதற்றமும், சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒன்று சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அதை இனி எதனைக்கொண்டும் இணைக்க முடியாது. சாய்ரா பானு, இந்த முடிவை வலி மற்றும் வேதனையின் வழியாகவே எடுத்திருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு தனிப்பட்ட பிரைவசியை அளிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வருத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் உடைய பதிவு:

அதை தனது எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வலியோடு உறுதிப்படுத்தி இருந்தார்.

அதில், "நாங்கள் எங்களின் முப்பதாவது திருமண நாளை கொண்டாடுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில் துண்டுகளாகிப் போன நாங்கள் மீண்டு வர முடியாமல் போனாலும், இந்த நிலைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம்.

நாங்கள் பலவீனமாக உள்ள இந்த நாட்களைக் கடக்கும்போது, எங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பும் மரியாதையும் அளித்த அழைத்து நண்பர்களுக்கும் நன்றி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி