தமிழ் சினிமாவில் நான் இல்லையா?.. இந்தியன் 2 உங்களுக்கு படமா தெரியலையா? - கடுப்பான சித்தார்த்
Dec 06, 2024, 08:13 AM IST
தமிழ் சினிமாவில் இல்லையா?.. இந்தியன் 2 உங்களுக்கு படமா தெரியலையா? என்று சித்தார்த் கடுப்பாகி பேசி இருக்கிறார்
மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ள
இயக்குநர் என்.ராஜசேகர் அடுத்து இயக்கியுள்ள திரைப்படம், ‘மிஸ் யூ’. சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
தமிழ் சினிமாவிலேயே இல்லையா?
அதில் கலந்து கொண்ட சித்தார்த்திடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்து
சித்தார்த் பேசும் போது, " நான் தமிழ் சினிமாவில் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் நடித்த சித்தா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் நான் கமல் சார் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் உங்களுக்கு படமாக தெரியவில்லையா?.. அந்தத் திரைப்படம் பற்றி நீங்கள் தான் பேசவில்லை. என்னுடைய வீட்டில் அது பற்றி நிறைய பேசினார்கள். கமல் சார் உடனே நடித்து விட்டாய் ஷங்கர் சார் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து விட்டாய் என்றெல்லாம் பாராட்டினார்கள். நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.
கல்யாண வாழ்க்கை
நீங்கள் என்னவென்றால் நான் தமிழ் சினிமாவிலேயே இல்லை என்று கூறுகிறீர்கள். நான் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறேன். இங்குதான் வரி கட்டுகிறேன். அடுத்த வருடம் நான் நடித்த 3 படங்கள் திரைக்கு வருகிறது." என்று பேசினார்.
கல்யாணம் குறித்து பேசிய சித்தார்த், பேப்பரை திறந்தாலே விவாகரத்து என்ற செய்தி தான் வருகிறது; அப்படிப்பட்ட சூழலில் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பாசிட்டிவான விஷயம் நடந்திருக்கிறது என்பதை இங்கு சொல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது" என்று பேசினார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
மிஸ் யூ சித்தார்த் உடன் ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார்.இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படம் முன்னதாக நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புயல் காரணமாக டிசம்பர் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்