தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lokesh Kanagaraj: “லோகேஷ் பாக்சிங் கத்துக்கிறார்.. டைமுக்கு..” - இளமை ரகசியத்தை உடைத்து விட்ட மாஸ்டர் மகேந்திரன்!

Lokesh kanagaraj: “லோகேஷ் பாக்சிங் கத்துக்கிறார்.. டைமுக்கு..” - இளமை ரகசியத்தை உடைத்து விட்ட மாஸ்டர் மகேந்திரன்!

Sep 24, 2023, 07:45 AM IST

google News
லோகேஷ் கனகராஜ் பாக்சிங் கற்றுக்கொண்டு வருவதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் பாக்சிங் கற்றுக்கொண்டு வருவதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் பாக்சிங் கற்றுக்கொண்டு வருவதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “லோகேஷ் பயங்கரமான ஷாக்கிங்கான பர்சன். நான் அவரிடம் நிறைய விஷயங்கள் பேசினேன். அவரைப்பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருந்தது காரணம், அவர் எல்லாவற்றிலும் தன்னுடைய கவனத்தை சரியாக வைத்திருக்கிறார்.

அவர் பயங்கர ஃபிட்டாக ஹீரோ போல இருக்கிறார். அவரிடம் எப்படி இப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்ட போது நான் தற்போது பாக்சிங் கற்றுக்கொண்டு இருக்கிறேன். பயிற்சி போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னார். வேலை பளு இவ்வளவு அதிகமாக இருந்த போதிலும் அவர் அவரது உடலுக்காக நேரம் ஒதுக்கி அவரை பத்திரமாக பார்த்துக்கொள்கிறார். சரியான நேரத்திற்கு சரியாக சாப்பிட்டும் வருகிறார்.” என்று பேசினார். 

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் நம்பிக்கையாக மாறியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்; வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் சினிமாவின் மீது கொண்ட பிரியத்தால் குறும்படங்களை எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சினிமாதான் தன்னுடைய வாழ்க்கை என முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ் முழு மூச்சாக சினிமாவில் இறங்கினார். தொடர் முயற்சியின் பலன் அவருக்கு ‘மாநகரம்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே அழுத்தமான திரைக்கதையால் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை எடுத்தார். அந்தப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்தப்படத்தின் பணிகள் நடந்து கொண்டிருந்த போதே விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்தப்படம்தான் மாஸ்டர். விஜய்சேதுபதி வில்லனாக நடித்த இந்தப்படம் கொரோனா காலத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தன்னுடைய ஆஸ்தான குருவான கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த இந்தப்படமானது 400 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சரி அடுத்தது என்ன செய்யப்போகிறார் என்று நினைப்பதற்குள் மீண்டும் விஜயுடன் இணைகிறேன் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். லியோ என பெயரிடப்படப்பட்டி இருக்கும் இந்தப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்தின் 171 படத்தை அவர் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை