Tamil Movies Release : ஆறுமுகம், கண்ணுக்குள்ளே என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!
Sep 25, 2024, 10:00 AM IST
Tamil Movies Released on Sep 25 : பரத் மற்றும் பிரியாமணி நடித்த ஆறுமுகம், கண்ணுக்குள்ளே என சில படங்கள் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. இன்றைய நாளில் வெளியான படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஆறுமுகம் (Aarumugam)
சுரேஸ் கிருஷ்ணாவால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் ஆறுமுகம் ஆகும். இதில் பரத் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 25ல் வெளிவந்தது.
கண்ணுக்குள்ளே (Kannukulle)
கண்ணுக்குள்ளே என்பது 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை லீனா மூவேந்தர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மிதுன் தேஜஸ்வி, அபர்ணா பிள்ளை, அனுமோள், மற்றும் யுகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சரத் பாபு, சண்முகராஜன், சிங்கமுத்து, வாசு ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 25 செப்டம்பர் 2019 இல் வெளியானது.
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது (Poranthalum Aambalaya Porakka Kudathu)
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது என்பது 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும் . இது என்.கே.விஸ்வநாதன் எழுதி, இயக்கி, படமாக்கினார். இப்படத்தில் பாண்டியராஜன் மற்றும் ஐஸ்வர்யா நடித்துள்ளனர். இப்படம் 25 செப்டம்பர் 1993 அன்று வெளியானது.
அன்னை வயல் (Annai Vayal)
அன்னை வயல் என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். பொன்வண்ணன் இயக்குனராக அறிமுகமான இப்படத்தை அவர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்னேஷ் , ராஜ் முரளி, வினோதினி , ராயல்ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இது 25 செப்டம்பர் 1992 இல் வெளியிடப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
அண்ணன் என்னடா தம்பி என்னடா (Annan Ennada Thambi Ennada)
அண்ணன் என்னடா தம்பி என்னடா என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். விஜய் கிருஷ்ணராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், அர்ஜுன், நிரோஷா, ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு கியான் வர்மா, ஆபாவாணன் ஆகியோர் இசை அமைத்தனர். இப்படமானது 25 செப்டம்பர் 1992 இல் வெளியானது.
டேவிட் அங்கிள் (David Uncle)
டேவிட் அங்கிள் என்பது 1992 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். எல். வாசு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆதித்தியன் இப்படத்தில் இசை அமைத்துள்ளார். ஆனந்த் ராஜ், சிவா, சிவரஞ்சனி, ரேகா மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படமானது 25 செப்டம்பர் 1992 இல் வெளியானது.
கலைக் கோவில் (Kalai Kovil)
கலைக் கோவில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இசைத் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கங்கா ஆகியோர் தயாரித்தனர். இது ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையாகும். பொருளாதார ரீதியாக இது ஒரு தோல்விப்படம் ஆகும். இது வீணை இசைக்கலைஞனின் கதையை மையமாக கொண்டது.
ஓடி விளையாடு பாப்பா (Odi Vilaiyaadu Paapa)
ஓடி விளையாடு பாப்பா திரைப்படம் 1959இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.