Thug Life: இதுவரைக்கும் இப்படி ஒரு ரெக்கார்டே இல்ல! சாதனை படைத்த கமல் திரைப்படம்... உற்சாகத்தில் படக்குழு
Thug Life: நடிகர் கமல்- இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் திரைப்படம் இதுவரை எந்த படமும் விற்பனையாகத விலையில் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகத்துடன் படக்குழு அடுத்தகட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன்- இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிவரும் திரைப்படம் தக் லைஃப். இவர்கள் இருவரின் கூட்டணியில் இதற்கு முன் வெளியான நாயகன் படம் இன்றளவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
புதிய சாதனை
தக் லைஃப் படத்தின் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 149 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த அளவு தொகையை இதற்கு முன் எந்தப் படத்திற்கும் கிடைக்காத நிலையில், ரிலீஸாகும் முன்பே தக் லைஃப் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.
படம் ரிலீஸ் எப்போது?
தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், மொத்த படத்திற்கான படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து, டப்பிங், எடிட்டிங் உள்ளி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை படக்குழு தீவிரப் படுத்தியுள்ளது.
பின்னர், நடிகர்கள் சிம்பு, கமல் ஹாசன் உள்ளிட்டோர் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாகவும் அறிவித்திருந்த நிலையில், படம் வரும் 2025ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கமலுக்கு ஜோடி யார்?
தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடிப்பதாகவும், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக யாரும் இல்லை எனவும் தெரிகிறது. இதையடுத்து அபிராமி, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ரவி கே. சந்திரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
கொண்டாட்டம்
தக் லைஃப் படத்தின் நாயகனான கமல் சினிமாவிற்கு அறிமுகமாக 65 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடினர். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பெரும் புள்ளியாக உள்ள கமல் ஹாசன் இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தக் லைப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 149 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு பெற்றுள்ளது. இதுவரை மற்ற படங்கள் பெற்ற டிஜிட்டல் உரிமைக்கான தொகையைக் காட்டிலும் இது அதிகம் என்பதால் படக்குழுவினர் உற்சாகத்துடன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னின் செல்வன் 2 என்ற அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்தது. மேலும் விருதுகளையும் அளித்த நிலையில், இவர் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து இயக்கும் தக் லைஃப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடமிருந்து வந்த வண்ணமாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள், அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்