GV Prakash Kumar: யானைகள் அட்டாக்கில் இருந்து தப்பித்த ஜிவி பிரகாஷ்! கள்வன் இயக்குநர் பகிர்வு
Feb 28, 2024, 08:25 PM IST
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கள்வன் படத்தின் மையக்கருவாக வனவிலங்கான யானை அமைந்திருக்கும் எனவும் மனிதன், விலங்குகள் இடையிலான மோதலை அடிப்படையாக கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், நடிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். இசையமைப்பு, நடிப்பு என இரண்டிலும் பட்டைய கிளப்பி வரும் அவர் தற்போது கள்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவானா, இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோர் பிரதான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மனிதன் விலங்குகளுக்கு இடையிலான மோதலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்காக 6 முதல் 7 யானைகளை லைவ்வாக வைத்து விஷுவல் எபெக்ட்ஸ் ஏதும் இல்லாமல் படமாக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
"யானை தொடர்பான காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் யானைகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சுமார் 5 நாள்கள் ஜிவி பிரகாஷ் யானைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டார். ரிஸ்க் நிறைந்த காட்சிகள் யானைகளை வைத்து தனியாகவும், நடிகர்களை வைத்து தனியாகவும் வழக்கமாக படமாக்கப்படும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை.
இந்த படம் முழுவதும் வனவிலங்குகளை மையமாக கொண்டிருக்கும். எனவே யானைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர செய்யும்போது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொண்டோம்.
படத்தில் ஒரு காட்சியில் ஜிவி பிரகாஷ் யானை கூட்டத்தில் இருந்து தப்பிப்பது படமாக்கப்பட்டது. அப்போது ஒரு யானை அவரை துரத்தி தாக்கவும் முயற்சித்தது. அதேபோல் யானைகள் அனைத்தும் பயிற்சியாளர்கள் கட்டளையை நன்கு பின்பற்றியது. நடிகர்கள் போல் செயல்பட்டது.
படப்பிடிப்பின்போது யானை பயிற்சியாளர்களுடன், மருத்துவர்களும் பாதுகாப்புக்காக உடன் இருந்தனர். படத்துக்கு கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள் கொண்டுவரப்பட்டன. அவற்றுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி படமாக்கினோம்"
இவ்வாறு அவர் கூறினார்.
ஜிவி பிரகாஷ் 100வது படம்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கள்வன், ரீபெல், இடிமுழக்கம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர இவரது இசையமைப்பிலும் மேற்கூறிய படங்களுடன் விக்ரம் 62, சூர்யா 43 ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். இதில் சூர்யா 43 திரைப்படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்