தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi Luck: வேட்டியை மடித்துக்கட்டி இறங்கும் குரு.. ஏப்ரல் 30 க்கு பிறகு அவ்வளவுதான்.. தப்பிக்குமா கன்னிராசி?

Guru Peyarchi Luck: வேட்டியை மடித்துக்கட்டி இறங்கும் குரு.. ஏப்ரல் 30 க்கு பிறகு அவ்வளவுதான்.. தப்பிக்குமா கன்னிராசி?

Feb 16, 2024, 10:37 AM IST

google News
இந்த உபய ராசிக்கு ஏழாம் இடம் என்று சொல்லக்கூடிய மீன ராசி என்பது பாதகம் மற்றும் மாரகமாக வருகிறது.
இந்த உபய ராசிக்கு ஏழாம் இடம் என்று சொல்லக்கூடிய மீன ராசி என்பது பாதகம் மற்றும் மாரகமாக வருகிறது.

இந்த உபய ராசிக்கு ஏழாம் இடம் என்று சொல்லக்கூடிய மீன ராசி என்பது பாதகம் மற்றும் மாரகமாக வருகிறது.

குரு பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 30 தேதி குரு பெயர்ச்சி பெயர்ச்சி நடக்கிறது. அவர் மேஷ ராசியில் இருந்து ரிஷபராசிக்கு செல்ல இருக்கிறார். இந்த பெயர்ச்சியானது கன்னி ராசிக்கு எந்த விதமான பலன்களை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.25 யாருக்கு பிஸியான நாளாக இருக்கும் பாருங்க..!

Dec 24, 2024 03:38 PM

கன்னி ராசியை பொறுத்த வரை அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல, தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வார்கள்.

கன்னி ராசி பொருத்தவரை குரு பகவான், அஷ்டமத்தில் இருக்கும் மேஷத்திலிருந்து,பாக்கியஸ்தானமான ரிஷப ராசிக்கு இடம் பெறுகிறார். கிருத்திகை 1 பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு இந்த இட பெயர்வு நடக்கிறது. பொதுவாக குரு இருக்கின்ற இடத்தை விட பார்க்கின்ற பார்வைக்கு பலம் அதிகம்.

உங்கள் ராசியின் ஏழாம் இடம் என்று சொல்லக்கூடிய மீன ராசிக்கு குருவானவர் அதிபதி. கடகம் சராசி, சிம்மம் ஸ்திர ராசி. கன்னி உபய ராசி.

இந்த உபய ராசிக்கு ஏழாம் இடம் என்று சொல்லக்கூடிய மீன ராசி என்பது பாதகம் மற்றும் மாரகமாக வருகிறது. மாரகம் என்று சொன்னவுடன், ஆளை கொன்று விடுமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. ஆனால், மாரகத்திற்கு இணையான பலன்களை அது செய்யும்.

பாதகம் என்றால் சகித்துக் கொள்ள முடியாத சில சோதனைகள். புதனுக்கு குரு பகவான் எதிரியாவார். இதற்கு முன்னதாக மேஷ ராசியில் குரு மறைந்திருந்தாலும் கூட உங்களுக்கு அவரால் சில பிரச்சினைகள் உங்களுக்கு வந்திருக்கும்.

குரு பகவான் ஒரு முழு சுப கிரகம். பிறப்பிலேயே நல்லவனாக இருக்கக்கூடிய குரு பகவான், ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கும் பொழுது பலவிதமான யோகங்கள் கிடைக்கும். இதனால் உங்களுடைய மனதில் ஒரு தெளிவு பிறக்கும். அதேபோல மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்கும் படி செய்வார்

நல்ல வேலை, செல்வம், புத்திர பாக்கியம், பொருள் வரவு புகழ் உள்ளிட்டவற்றை கொடுப்பார். உங்களுக்கு மூன்றாம் இடமான விருச்சிக ராசியை அவர் ஏழாம் பார்வையாக பார்ப்பதால். நண்பர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கன்னி ராசியை பொருத்தவரை அவருக்கு நண்பராக இருப்பவர்கள் அவர்களுக்கு நல்லது செய்ததாக வரலாறே கிடையாது.

பெரும்பான்மையான கன்னி ராசிக்காரர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது அவருடைய நண்பர்கள் தான். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அந்த மாதிரியான நண்பர்கள் விலகி, நல்ல நண்பர்கள் உங்களிடம் வந்து சேர்வார். பூர்வ ஜென்மஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக குரு பார்ப்பதால் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கும்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி