Guntur Kaaram OTT release: நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் ‘’குண்டூர் காரம்’’
Feb 08, 2024, 06:05 PM IST
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா நடித்த குண்டூர் காரம் பிப்ரவரி 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் வெளியிடப்படும்.
இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா நடித்த குண்டூர் காரம் திரைப்படம், கடந்த ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தியை என்கிற பொங்கலை முன்னிட்டு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தெலுங்கு மொழி பாக்ஸ் ஆபிஸில் ஹனுமன், சைந்தவ் மற்றும் நா சாமி ரங்கா ஆகியப்படங்களுடன் மோதி நல்ல வசூலை செய்தது.
ஓடிடி வெளியீடு:
மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் புதிய டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் இந்தியா சவுத் வியாழக்கிழமை(இன்று) தங்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது.
அதில், "அடுத்த 12 மணி நேரத்திற்கு என் மூளை இதைப்பற்றித்தான் சிந்திக்கும்: சர்ரா சர்ரா சூலம். குண்டூர் காரம் திரைப்படமானது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 12 மணி நேரத்தில் நெட்ஃபிளிக்ஸில் வருகிறது. #GunturKaaramOnNetflix." இந்தப் படம் மற்ற தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதாக ஏராளமான ரசிகர்கள் வீடியோவின் கீழ் கருத்துகளை பதிவிட்டனர். மேலும் #GunturKaaramOnNetflix என்ற ஹேஷ்டேக்கும் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது.
சில நாட்களுக்கு முன்பு ஆரம்ப அறிவிப்பை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் இந்தியா எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில், "ரவுடி ரமணா இங்கே இருப்பதால் இது மிகவும் சூடாக இருக்கும். குண்டூர் காரம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பிப்ரவரி 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வருகிறது. #GunturKaaramOnNetflix" எனத் தெரிவித்துள்ளது. இப்படம் நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டூர் காரம் படம் எத்தகையது:
அத்தடு மற்றும் கலேஜாவுக்குப் பிறகு, இயக்குநர் திரிவிக்ரம் மற்றும் மகேஷ் பாபு இணைந்து உருவாகிய மூன்றாவது படம் குண்டூர் காரம். படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வணிகம் மெதுவாக பிக்கப் ஆகி ஹிட்டானது. தெலங்கானா மற்றும் வெளிநாடுகளை விட ஆந்திராவில் படம் நல்ல வியாபாரம் செய்து வருவதாகவும் தயாரிப்பாளர் நாக வம்சி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறினார்.
இப்படத்தில் தனது தாய் ரம்யா கிருஷ்ணனிடம் இருந்து பிரிந்து வாழும் குண்டூரைச் சேர்ந்த ரமணா என்ற ரவுடியாக மகேஷ் பாபு நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் அரசியல்வாதி தாதாவாக நடித்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு தாய் ஏன் தன் மகனை கைவிட்டாள் என்ற உண்மையைக் கண்டுபிடிக்க, மகேஷ் பாபு கிளர்ச்சிசெய்கிறார்.
இந்தப் படம் ஒரு மசாலா பொழுதுபோக்கு படமாக சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் கதையின் பெரும்பகுதி ரமணாவின் தாயுடனான உறவைப் பற்றியது. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ரகு பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9