தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அட்ஜஸ்ட்மென்ட்டா.. ஒரு டைரி போடலாம்’ பிக்பாஸ் போகும் முன் விசித்ரா அளித்த ‘கவர்ச்சி’ பேட்டி!

‘அட்ஜஸ்ட்மென்ட்டா.. ஒரு டைரி போடலாம்’ பிக்பாஸ் போகும் முன் விசித்ரா அளித்த ‘கவர்ச்சி’ பேட்டி!

Oct 03, 2023, 05:30 AM IST

google News
BiggBoss 7 Tamil Vichitra: ‘இப்போ நான் இருந்திருந்தால், தமன்னாவை தூக்கி சாப்பிட்டிருப்பேன். 20 வருசத்திற்கு முன்னாடி நான் வந்துட்டேன், இப்போ தான் நான் வந்திருக்க வேண்டும்’
BiggBoss 7 Tamil Vichitra: ‘இப்போ நான் இருந்திருந்தால், தமன்னாவை தூக்கி சாப்பிட்டிருப்பேன். 20 வருசத்திற்கு முன்னாடி நான் வந்துட்டேன், இப்போ தான் நான் வந்திருக்க வேண்டும்’

BiggBoss 7 Tamil Vichitra: ‘இப்போ நான் இருந்திருந்தால், தமன்னாவை தூக்கி சாப்பிட்டிருப்பேன். 20 வருசத்திற்கு முன்னாடி நான் வந்துட்டேன், இப்போ தான் நான் வந்திருக்க வேண்டும்’

பிரபல முன்னணி கவர்ச்சி நடிகையும், குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கும் விசித்ரா, நிகழ்ச்சிக்கு போகும் முன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. இதோ அந்த பேட்டி:

‘‘எனக்கு ஆரம்பத்தில் மெஜூரிட்டியே இல்லை. படம் ஹிட்டானது கூட தெரியாது. சும்மா தியேட்டரில் போய் பார்க்கும் போது தான், நான் வர்ற சீனுக்கு பயங்கர விசில், கைத்தட்டல் இருந்தது. மற்றபடி, என்னுடைய கதாபாத்திரம் என்ன, நான் பேசிய டயலாக்கோட அர்த்தம் என்ன என்பது கூட எனக்கு தெரியாது. என்னோட வயதை விட 15 வயது அதிகமான கேரக்டரை தான் நான் அப்போ பண்ணேன். அவங்க சொன்னதை பண்ணேன். 

ஆனால் அது இப்படி மாறும் என்று தெரியாது. படம் ஹிட் ஆச்சு, ஆனால், புரிந்திருந்தால் அந்த படங்களை நான் பண்ணியிருக்க மாட்டேன். அதன் பின் கவர்ச்சி படங்கள் தான் வந்தது. என்னுடை உயரம், எடை, நிறம் எல்லாத்தையும் பயன்படுத்த சினிமா நினைத்தது. 

நான் ரொம்ப கவர்ச்சியா இருந்தேன். அதனால் எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரம் வந்தது. வாழ்வே மாயம் ஸ்ரீதேவி கதாபாத்திரம் என்று கூறி என்னை ஏமாற்றிவிட்டனர். தமன்னா காவாலா பாடலில் ஆட்டம் போடுகிறார், வெப்சீரிஸில் போய் பார்த்தால் நடிக்கிறார். அவர்களை அப்படி ஏற்கும் போது, என்னை மட்டும் ஏன் கவர்ச்சியாக மட்டும் அடையாளப்படுத்துகிறார்கள்? 

இப்போ நான் இருந்திருந்தால், தமன்னாவை தூக்கி சாப்பிட்டிருப்பேன். 20 வருசத்திற்கு முன்னாடி நான் வந்துட்டேன், இப்போ தான் நான் வந்திருக்க வேண்டும். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் நடுவில் தான் என்னுடைய நடிப்பு இருக்கும். உங்கள் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக அது இருக்கும். அந்த நடிப்பு எல்லாருக்கும் வராது. 

நான் நன்கு நடினம் ஆடுவேன். அதனால் எனக்கு பாடல்கள் கிடைத்தது. மற்றபடி பிராண்ட் பண்ணது, இவர்களாக என்னை அப்படி பண்ணிவிட்டார்கள். என்ன வேண்டுமானாலும் கொடு, நான் பண்ணி காட்டுகிறேன் என்கிற கட்ஸ் நடிகைகளுக்கு வேண்டும். இன்று அதை பண்றாங்க. அந்த காலத்தில் அப்படி இல்லை. தங்கை வேடத்தில் நடித்தால் ல தங்கை வேடம் மட்டும் தான் தருவாங்க. 

என்னுடைய காலத்தில் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் இருந்ததா என்றால், ஒரு டைரி வேண்டும். அத்தனை பெயர்களை எழுதலாம். அவர்களிடம் எல்லாம் போய் கேட்டு வரமுடியுமா? இதைப்பற்றி பேசுவதே அநாவசியம். மீ டூ என்று ஒன்று வந்தது. பேசியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? பேட்டியில் பேசுபவர்களுக்கு, நான்கு படம் அதிகம் வந்துவிட்டதா? முடிந்தால் இரு, அதை எதிர்கொள், இல்லையென்றால் சினிமாவில் எதுக்கு இருக்கீங்க?

‘இவன் என்னை கூப்பிட்டான்.. என்னால் போகமுடியல’ என்று இப்போ பேட்டி அளிக்கும் நடிகைகளை பார்த்தால், ரசிக்கும் படி இல்லை. ஒரு சூட்டிங் போன இடத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அந்த ஓட்டல் உரிமையாளரை காதலித்து கல்யாணம் பண்ணிட்டேன். அவருக்கு என்னுடைய படங்கள் எதுவும் தெரியாது. கல்யாணத்திற்கு அப்புறம் தான் பார்த்து ஷாக் ஆகிட்டார்,’’
என்று அந்த பேட்டியில் விசித்ரா கூறியுள்ளார். 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி