இயக்குநர் கெளதம் மேனனின் இரண்டு கிளைமாக்ஸ் படங்கள்
Feb 17, 2022, 12:59 PM IST
கெளதம் மேனன் இயக்கிய மூன்று படங்களில் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு திருப்தி தாராத காரணத்தினால் மீண்டும் மாற்றியமைத்தார்.
இயக்குநர் கௌதம் மேனன் டபுள் கிளைமாக்ஸுக்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. படப்பிடிப்பு நடத்தும் போதே அவர் இரண்டு விதமான கிளைமாக்ஸ் காட்சிகளை தயார் செய்து வைத்துக் கொள்வார்.
ஏனென்றால் பார்வையாளர்களுக்கு ஒரு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்றால் உடனே இரண்டாவது கிளைமாக்ஸ் மாற்றி ரிலீஸ் செய்வார். மேலும் தன் படத்தின் கதையை முதலில் 80 விழுக்காடு மட்டுமே எழுதுவேன் என்றும், படப்பிடிப்பு தொடங்கிய பிறகு தான் மீதம் உள்ள காட்சிகள் முடிக்கப்படும் என அவரே ஒரு முறை பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது இயக்குநர் கெளதம் மேனன் இரண்டு கிளைமாக்ஸுகளுடன் இயக்கிய படங்களையும், அவர் எதனால் அதை மாற்றினார் என்பதை இந்த செய்தியில் காண்போம்...
விண்ணைத்தாண்டி வருவாயா
சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை கௌதம் மேனன் இயக்கினார். கௌதம் மேனன் படங்களிலேயே இந்த படம் பல பேரின் மனதிற்கு நேருக்கமான ஒன்றாக உள்ளது.
இந்த படத்தில் நாம் இதுவரை பார்த்திடாத திரிஷா, சிம்புவை கெளதம் மேனன் ரசிகர்களுக்கு காட்டினார். குறிப்பாக இப்படம் காதலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் வெளியான கிளைமாக்ஸ் காட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் சிம்பு, திரிஷா திருமணம் செய்துக் கொள்ளாமல் பிரிந்து செல்வது போல் எடுக்கப்பட்டது. ஆனால் தெலுங்கு ரசிகர்களாக கிளைமாக்ஸில் சமந்தா, நாகசைதன்யா இணைவது போல் காட்சி அமைக்கப்பட்டது.
காக்க காக்க
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’காக்க காக்க’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்த ஒன்று. கெளதம் மேனன் கையில் எடுத்த முதல் காவல் படமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கையில் காப்பு, சிக் பேக் என சூர்யாவை மற்றொரு கோணத்தில் காண்பித்திருந்தார் இயக்குநர் கெளதம். ரவுடிகள், நாயகி ஜோதிகாவை கடத்தி கொலை செய்வது போல் முதலில் கிளைமாக்ஸ் காட்சி அமைக்கப்பட்டது.
சூர்யா, ஜோதிகா திருமணம் செய்யாமல் போன கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு அதிருப்தி கொடுத்ததால், மீண்டும் இருவரும் இணையவது போல் காட்சி மாற்றப்பட்டது.
வேட்டையாடு விளையாடு
கௌதம் மேனன் இயக்கிய ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடிக்க முன்னதாக கமல் ஹாசனுக்கு பதிலாக பலரிடம் பேசப்பட்டது. ஆனால் யாரும் சம்மதம் தெரிவிக்காததால், கடைசியில் அப்படம் கமல் ஹாசன் கைக்கு வந்தது. தயாரிப்பாளர் உயிரழப்பு, பட்ஜெட் பிரச்சனை என தொடர்ந்து பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து கௌதம் மேனன் 80 லட்சம் முதலீடு செய்து படத்தை எடுத்தார்.
இரண்டு கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக கமல் நியூயார்க் செல்கிறார். அவர்களை எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார் என்று ஒரு பக்கம் படம் நகர, மறுபக்கம் ஜோதிகாவுடன் காதலில் விழுக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்கள் ஜோதிகாவை மண்ணில் புதைத்து கொலை செய்கின்றனர். இது ரசிகர்களுக்கு திருப்தி தாராத காரணத்தினால் ஜோதிகா உயிர் பிழைத்து கமல் ஹாசனை திருமணம் செய்துக் கொள்வது போல் காட்சி மாற்றப்பட்டது.