தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Irir: 'அன்பு எந்த புள்ளியில் வெறுப்பா மாறுது'.. 4 வருடங்களை கடந்த இஸ்பேட் ராஜா

IRIR: 'அன்பு எந்த புள்ளியில் வெறுப்பா மாறுது'.. 4 வருடங்களை கடந்த இஸ்பேட் ராஜா

Aarthi V HT Tamil

Mar 15, 2023, 01:01 PM IST

google News
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெளியாகி இன்றுடன் ( மார்ச் 14 ) 4 ஆண்டுகள் நிறைவடைக்கிறத.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெளியாகி இன்றுடன் ( மார்ச் 14 ) 4 ஆண்டுகள் நிறைவடைக்கிறத.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெளியாகி இன்றுடன் ( மார்ச் 14 ) 4 ஆண்டுகள் நிறைவடைக்கிறத.

மனிதன் தொடங்கிய நாளிலிருந்தே காதல் என்ற விஷயம் இருக்கிறது. எதனால் காதல் வருகிறது என்பது இன்றும் வரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. காதல் ஒரு பொதுவான விஷயமாகப் பார்க்கப்பட்டாலும் அனைவரின் காதலும் சமமானது இல்லை. எப்படி அனைவருக்கும் விதவிதமான கைரேகை இருக்கிறதோ அதே போன்று தான் காதலும் தனித்துவமான ஒன்று. அப்படி தனித்துவமான காதல் கதை தான், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

கதை

”இந்த உலகத்திலேயே யாரை அதிகமாக நேசிக்கிறீங்களோ, அவங்க தான் அதிகமா வெறுப்பீங்க, யார் அதிகமா வெறுக்கிறீங்களோ, அவங்கள தான் அதிகமாக நேசித்து இருக்கீங்க.

அன்பு எந்த புள்ளியில் வெறுப்பா மாறுது, பிரிவுக்கும் இறப்புக்கும் நம்ம மனசு எப்படி எல்லாம் தவிக்குதோ, அது தானே அவங்களுக்கும் நடக்கும் என்ற ஒரு சின்ன விஷயம் கூட புரியா விடாம எந்த விஷயம் தடுக்குது. சேர்த்து வச்சா அத்தனை அழகான நினைவுகளையும் மறக்க வைக்கிறது, பிரிவோ, ஏமாற்றமோ, வலியோ கிடையாது, நிராகரிப்பு தாங்க முடியாத ஈகோ தான் அது. ஈகோ இருக்கிற இடத்துல அன்புக்கு இடமே கிடையாது” என்ற வசனத்துடன் படம் தொடங்கும்.

இதிலிருந்தே தெரிய வருகிறது. ஹீரோ ஈகோ பிடித்தவர் என்று. அதனால் அவர்களின் காதலில் என்ன நடக்கும் என்பதே இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி சொல்லி இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாணின் ( கவுதம்) கேரக்டர் சட்டென்று கோபப்பட்டு விடும் ஆண். அவர் தனது தாய் வேறு ஆணுக்காக விட்டுச் செல்வதைச் சமாளிக்க முடியாமல் மனமுடைந்து போகிறான்.

ஷில்பா மஞ்சுநாத்தின் நடிப்பு பாராட்டுக்குரியது, நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது கதாபாத்திரம் உறுதியுடன் எழுதப்பட்டுள்ளது. அவர் தனது நடைமுறை அணுகுமுறையுடன் திரைப்படத்திலும் உறவிலும் மையக் கட்டத்தை எடுக்கிறார்.

ஒரு சில காட்சிகள் பாராட்டப்பட வேண்டும் . உதாரணமாக, தாரா கௌதம் உடனான உறவை முறித்துக் கொள்ளும்போது, ​​அவன் அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்கிறான். தாராவின் தோழி, கௌதமை ஒரு வேட்டையாடுபவர் என்று அழைக்கும் தைரியம் கொண்டவர் மற்றும் அவருக்கு மருத்துவ உதவி தேவை என்று சுட்டிக்காட்டுகிறார்.

கௌதமின் நண்பர்கள் முதல் அவரது தந்தை வரை, அவரது கோபப் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் யாரும் அவருடைய பிரச்னையைச் சமாளிக்க உதவவில்லை. மாறாக, அவர்கள் அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என தாரா செய்து காட்டுவார்.

ஒரு கட்டத்தில் தாராவிற்கு வேறு மாப்பிள்ளை வர தூங்கிக் கொண்டு இருந்த மிருகம் வெளியே வருவது போல் பழைய படி கவுதம் வந்துவிடுவான். எனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்குமே கிடைக்கக் கூடாது என்ற எண்ணாம் காதலிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் வருகிறது. அது அனைத்தும் அன்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் வெறுப்பாக மாறும். அப்படி தான் வெறுப்பாக மாறி தாராவை கொலை செய்யும் அளவிற்குக் கவுதம் சென்றுவிடுவார்.

”காதல் எப்போது வெறுப்பாக மாறுகிறது? ஒரு காதலனைக் கொலையாளியாக மாற்ற எது தூண்டுகிறது? ”என்ற வசனம் நம்மை ஒரு முறை சிந்திக்க வைக்கும்.

அதற்கு பிறகு தான் எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தாராவை விட்டு விலகி பயணம் செய்யக் கிளம்பிவிடுவார். ஆனால் உன்னை அவ்வளவு எளிதாக நான் விட்டுவிட மாட்டேன் என சொல்லி பல நாட்கள் கழித்து தாரா, கவுதமை தேடி செல்லும் காட்சி அர்ப்புதமாக இருக்கும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி