தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Farhana Movie Review: த்ரில்லரா? க்ரைமா? வாழ்வியலா? ஃபர்ஹானா ‘நச்’ விமர்சனம் இதோ!

Farhana Movie Review: த்ரில்லரா? க்ரைமா? வாழ்வியலா? ஃபர்ஹானா ‘நச்’ விமர்சனம் இதோ!

May 11, 2023, 07:29 PM IST

Farhana Review: கதையை கனகச்சிதமாக கடத்துவதில் இசை பெரும் பங்கு வகித்து இருக்கிறது. வசனங்கள் தெறி ரகம்.
Farhana Review: கதையை கனகச்சிதமாக கடத்துவதில் இசை பெரும் பங்கு வகித்து இருக்கிறது. வசனங்கள் தெறி ரகம்.

Farhana Review: கதையை கனகச்சிதமாக கடத்துவதில் இசை பெரும் பங்கு வகித்து இருக்கிறது. வசனங்கள் தெறி ரகம்.

நாளை வெளியாகிறது ஃபர்ஹானா திரைப்படம். முன்பே செய்தியாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று சென்னையில் திரையிடப்பட்டது. படம் முடிந்த கையோடு இந்துஸ்தான் டைம்ஸ் வழங்கும் திரை விமர்சனம் இதோ:

ட்ரெண்டிங் செய்திகள்

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

கணவர், குடும்பம் குழந்தைகள் என கறாரான இஸ்லாம் குடும்பப் பெண் ஃபர்ஹானா, வீட்டின் வறுமை காரணமாக கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார். இதற்கிடையே குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுகிறார்.

அங்கு சென்ற பின்னர்தான் தெரிகிறது, அது ஆண்கள் தங்களுடைய இச்சைத்தேவைக்காக பேசும் இடம் என்பது. இதை தெரிந்து கொண்ட ஃபர்ஹானா உடனே அங்கிருந்து மாற வேண்டும் நினைக்கும் போதுதான் நபர் ஒருவர் அவருக்கு கால் செய்கிறார்.

கொஞ்சம் வித்தியாசமாக பேசும் அவரிடம் மனதை பறி கொடுக்கிறார் ஃபர்ஹானா. இதனிடையே அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர் இப்படி போன் பேசிய ஒருவருடன் சென்று உயிரை பறிகொடுக்கிறார். இதைப்பார்த்து பயந்து போகும் ஃபர்ஹானா அவர் மீது வைத்த பிரியத்தை அப்படியே கட் செய்து எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் கால் செய்தவர் விடுவதாக இல்லை. அதன் பின்னர் என்ன ஆனது? ஃபர்ஹானாவின் மறைமுகப்பிரியம் அவரை எங்கே கொண்டு சென்றது? இது அவரது கணவருக்கு தெரிந்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை!

ஃபர்ஹானா கதாபாத்திரத்தில் வாழ்ந்து, படத்தின் ஆகப்பெரும் பலமாய் நிற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒட்டுமொத்த படத்தையும் தன்னுடைய நடிப்பால் தாங்கிச் செல்கிறார். அவரது கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரம் அழகான முறையில் எழுதப்பட்டு இருந்தது. கொடுத்த கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்தையும், நேர்மையையும் அமைதியான முறையில் அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் சிறப்பு. ஐஸ்வர்யா தத்தாவிற்கு வழக்கம் போல கிளாமர் வேடம். செல்வராகவன் நடிப்பை விட குரல் மிரட்டுகிறது. 

நெல்சன் வெங்கடேசன் ஒரு சிம்பிளான கதையை இஸ்லாம் குடும்பப்பெண்ணையும், அவளது வாழ்வியல் நெறிமுறைகளையும் கலந்து சொல்லியிருக்கிறார். அந்தக்கலவை இந்தக்கதைக்கு நன்றாகவே கை கொடுத்து இருக்கிறது. சுத்த இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் ஒருவள் இப்படியான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் போது, அவளிடம் இயல்பாக இருக்கும் ஒழுக்கமும், அவளின் மார்க்கமும் அவளை கேள்விக்கேட்கும் தருணங்கள் படத்தை இன்னொரு தளத்திற்கு நம்மை கொண்டு சென்று இருக்கிறது. 

முதல் பாதி கொஞ்சம் நீளம் போன்ற உண்ர்வைக்கொடுத்தாலும், க்ரிப்பான திரைக்கதையும், செல்வராகவன் பேசும் வசனங்களும் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றன. இரண்டாம் பாதி முழுக்க என்கேஜிங்காகச் சென்றது. ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. 

இஸ்லாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவளுக்கு இப்படி நடக்கிறது என்பதை காட்சிகளின் நம்பகத்தன்மை செவ்வென ஒரு பக்கம் கடத்த, இன்னொரு பக்கம் ஜஸ்டினின் இசை கனகச்சிதமாக கடத்தி இருக்கிறது. இறுதியாக ஃபர்ஹானா அவரை சந்திக்கும் இடத்தை கிளைமேக்ஸாக வைத்தது படம் என்னவோ ஒரு முழுமையடையாத உணர்வை கொடுத்தது. அந்த இடத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக கையாண்டு இருந்தால் ஃபர்ஹானா பெரிய வெற்றியை ருசித்திருப்பாள். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி